ஆத்தி.. என்னவொரு ஸ்பீடு.. ரேஷ்மா பசுபுலேட்டி வெறித்தனமா வொர்க்கவுட் பண்றாங்களே.. செம வீடியோ!

சென்னை: நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி வெளியிட்டுள்ள வொர்க்கவுட் வீடியோ தற்போது சோஷியல் மீடியா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. பப்ளி நடிகையாக சினிமா மற்றும் சின்னத்திரையில் வலம் வரும் ரேஷ்மா பசுபுலேட்டி இப்படி எல்லாம் வெறித்தனமா வொர்க்கவுட் செய்து ஸ்லிம் ஆகிட்டா பசங்க கதி என்ன ஆகுறது என புலம்பி வருகின்றனர்.

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் சூரிக்கு ஜோடியாக ரேஷ்மா பசுபுலேட்டி நடித்திருப்பார்.

Reshma Pasupuleti workout heroine vilangu

நடிகர் விமலின் விலங்கு வெப்சீரிஸில் கிச்சாவின் மனைவியாக நடித்தும் தனது நடிப்பால் ரசிகர்களை திகிலடைய செய்திருந்தார் ரேஷ்மா பசுபுலேட்டி.

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி: சினிமா, சீரியல் என நடித்து அசத்தி வரும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி போல்டாக பல போட்டோஷூட்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும், வெளிப்படையாக அந்தரங்கம் அன்லிமிடெட் எனும் பாட் காஸ்ட் நிகழ்ச்சியில் அவர் பல விஷயங்களை பேசி பகீர் கிளப்பினார். மேலும், விவாத நிகழ்ச்சியில் சுச்சி லீக்ஸ் சமயத்தில் தனது ஆபாச மார்பிங் வீடியோ பரவியது என்றும் பேசியிருந்தார்.

Reshma Pasupuleti workout heroine vilangu

பல படங்கள்: வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், வணக்கம் டா மாப்பிள்ளை, விலங்கு வெப்சீரிஸ் என ரேஷ்மா பசுபுலேட்டி ஒருவித விவகாரமான வேடங்களாகவே நடித்து வருவதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வரும் நிலையில், அதை பற்றியெல்லாம் கண்டுக்கொள்ளாமல் தொடர்ந்து சினிமா மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார். பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மா பசுபுலேட்டிக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்துள்ளது.

வொர்க்கவுட் வீடியோ: இடுப்போரம் உள்ள பெரிய டாட்டூவை எல்லாம் காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து வந்த ரேஷ்மா பசுபுலேட்டி மேக்கப் இல்லாத போட்டோக்களையும் கூட வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைத்து வருவார். இந்நிலையில், வேகமாக வொர்க்கவுட் செய்யும் வீடியோ ஒன்றை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரேஷ்மா பசுபுலேட்டி வெளியிட்டுள்ளார்.

இவரும் ஒல்லியாகிட்டா?: பப்ளி நடிகைகளான ஹன்சிகா, லாஸ்லியா, ஷிவானி நாராயணன், ஜோதிகா உள்ளிட்ட பலர் வொர்க்கவுட் செய்து ஸ்லிம்மாகி வரும் நிலையில், ரேஷ்மா பசுபுலேட்டியும் ஒல்லியாகிட்டா என்ன பண்றது என்றும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X