twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஈவ் டீசிங் செய்தால் பயப்படாதீங்க.. பளார் என அடிங்க.. பெண்களுக்கு வித்யாபாலனின் அட்வைஸ்

    |

    மும்பை: பெண்களை அவர்கள் அணியும் ஆடைகளைக் கொண்டு தரக்குறைவாக மதிப்பிடக் கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளார் நடிகை வித்யாபாலன். அதோடு, ஈவ் டீசிங் செய்பவர்களை பெண்கள் திருப்பி அடிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுரை கூறியுள்ளார்.

    வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வரும் வித்யாபாலன், பாலிவுட்டில் பிரபல நாயகியாக வலம் வருகிறார். மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான த டர்ட்டி பிக்சர் படத்தில் இவரது கவர்ச்சி நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இப்படத்திற்காக வித்யாபாலனுக்கு சிறந்தநடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.

    இதேபோல், ‘கஹானி' படத்தில் கர்ப்பிணி வேடத்தில் தீவிரவாதி கணவனை கொலை செய்யும் பெண்ணாக நடித்திருந்தார்.

    இந்நிலையில், மும்பையில் இளைஞர்கள் நல நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டார் வித்யாபாலன். அப்போது அவர் பேசியதாவது:-

    ஆணும், பெண்ணும் சமம்...

    ஆணும், பெண்ணும் சமம்...

    ஆண், பெண்களை பிரித்து பார்க்க கூடாது. இருவருக்கும் சம உரிமை இருக்கிறது. இன்றைய உலகமும் அதை நோக்கித்தான் போய்க்கொண்டு இருக்கிறது.

    தவறான மதிப்பீடு...

    தவறான மதிப்பீடு...

    பெண்கள் ஆடை உடுத்துவதை வைத்து அவர்களை மதிப்பீடு செய்வது தவறு. பெண்கள் எந்த மாதிரி ஆடைகளை அணிய விரும்புகிறார்களோ அதை அணிந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்.

    ஆடை சுதந்திரம்...

    ஆடை சுதந்திரம்...

    ஆடையை வைத்துத்தான் பெண்களுக்கு மரியாதை என்ற நிலைமை இருக்கக்கூடாது. பெண்கள் எந்த துறையை சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம் நடிகையாகவும் இருக்கலாம். ஆடைகள் அணிவதில் அவர்களுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. அவர்கள் உடுத்தும் ஆடைகளின் நீளத்தை வைத்து மரியாதை அளிப்பது ஏற்புடையது அல்ல.

    ஈவ் டீசிங்...

    ஈவ் டீசிங்...

    எல்லா இடங்களிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கின்றன. ஈவ் டீசிங் தொல்லைக்கு ஆளாகிறார்கள்.

    திருப்பி அடிக்க வேண்டும்...

    திருப்பி அடிக்க வேண்டும்...

    ஈவ் டீசிங் மற்றும் தவறாக நடக்க முயலும் ஆண்களை பார்த்து பெண்கள் அஞ்சி அலறக்கூடாது. அவர்களை திருப்பி அடிக்க வேண்டும். அப்படி செய்தால் பயந்து ஓடி விடுவார்கள்.

    சொந்தக்காலில் பெண்கள்...

    சொந்தக்காலில் பெண்கள்...

    ஆண்கள் போல் பெண்களும் தனது சொந்த காலில் நிற்க வேண்டும். முன்பெல்லாம் தொழில் நிறுவனங்களில் பெண்களை பார்க்க முடியாது. ஆனால் இப்போது வேலை பார்க்கும் பெண்களை அதிகம் பார்க்க முடிகிறது. இது மகிழ்ச்சி அளிக்கிறது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    Speaking at ‘Youth for Unity’ event in Mumbai, actress Vidya Balan said that women should not be controlled or judged by what they wear.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X