தென்னிந்தியாவே இவங்கதான்.. கயாடு லோஹரை ஒரம் கட்டிய கனிமா பீவர்.. பூஜா ஹெக்டே சொன்ன சீக்ரெட்

சென்னை: பாலிவுட் முதல் கோலிவுட் வரை கலக்கிக் கொண்டிருக்கும் பிரபலமான நடிகை தனது நடன அசைவுகளால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். நடிகர் விஜய் சொல்வது போல் என் நெஞ்சில் குடியிருக்கும் கோடான கோடி ரசிகர்கள் மனதில் தற்போது இந்த நடிகையின் நடனம் தான் ஹாட் பீட்டாக ஒலிக்க தொடங்கியிருக்கிறது. சென்ஷேனல் ஹீரோயின்களான கயாடு லோஹர், மமிதா பைஜூவையும் தூக்கி சாப்பிட்டு விட்டார் எனவும் கிசுகிசுக்கின்றனர். தென்னிந்தியாவில் இவர் ஆடாத நடனமே இல்லை என தெரிவிக்கிறார்கள்.

முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் பூஜா ஹெக்டே. மிஷ்கின் இயக்கத்தில் உருவான இப்பட்தில் கடிகாரம் தலைகீழாக ஓடும் பாடல் காதல் ரீங்காரமாக ஒலித்தது. சூப்பர் ஹீரோவை மையப்படுத்தி உருவான இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனால், ராசி இல்லாத நடிகை என பூஜா ஹெக்டேவை கோலிவுட் ஒதுக்கி தள்ளியது. அதன் பிறகு தெலுங்கு படங்களில் கவனம் செலுத்திய இவர், முகுந்தா படத்தின் மூலம் அக்கட தேசத்தில் அறிமுகம் ஆனார். முதல் படமே அவருக்கு கோல்டன் கிக் அடித்தது. அவர் நடித்த இரண்டாவது படமே அல்லு அர்ஜூனுடன் நடித்தார். இதைத்தொடர்ந்து தெலுங்கில் பூஜா ஹெக்டே இல்லாத ஹீரோ படங்களே இல்லை என்ற பேச்சுக்கள் வர ஆரம்பித்தன. இருப்பினும் தமிழில் முன்னணி நடிகையாக வரவேண்டும் என்பது அவரது நீண்ட நாள் கனவாகவே இருந்தது. அதற்கான வாய்ப்புகள் சரியாக அமையாமல் இருந்தன.

retro-audio-launch-pooja-hegdes-dance-to-the-song-kanima-goes-viral

சென்ஷேசனல் ஹீரோயின்: நடிகர்களுக்கு இணையான நடனம் ஆடுவதில் வல்லவராக இருந்த பூஜா ஹெக்டேவிற்கு ரசிகர்களின் ஆதரவு குறைவுதான். ஆனால், கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான அலவைகுந்தபுரம் படம் அதிரி புதிரி ஹிட் அடித்தது. இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த படமாக அமைந்தது. பான் இண்டியா படமாக இல்லாதது மட்டுமே குறையாக இருந்தன. இப்படத்தில் பூஜா ஹெக்டேவின் நடனம் சமூகவலைதளஙகளில் டிரெண்டிங் ஆனது. புட்ட பொம்மா பாடல்களுக்கு நடனம் ஆடாத கால்கள் இருக்கின்றனவா. ஸ்டைலிஷ் ஸ்டாரான அல்லு அர்ஜூன் நடனத்தை பார்த்து வியந்த ரசிகர்கள், பூஜா ஹெக்டேவின் கால்களை பார்த்து சொக்கி போனார்கள். இப்படத்தில் பூஜா ஹெக்டே உலக அளவில் ஃபேமஸ் ஆனார். தெலுங்கு சினிமாவில் ஒரே நாளில் சென்சேஷனல் ஹீரோயினாக ஜொலிக்க தொடங்கினார் பூஜா ஹெக்டே.

சல்மான்கானுடன் ஆட்டம்: பூஜா ஹெக்டே எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் புட்ட பொம்மா பாட்டிற்கு ஒரு ஆட்டம் போட சொல்லிடுவார்கள். அவரும் தயங்காமல் அந்த பாட்டிற்கு இடுப்பை அசைத்து ஒரு பொம்மை போல நடனம் ஆடுவதும் உண்டு. இந்நிலையில், தமிழில் சூப்பர் ஹிட் படமான வீரம் படத்தின் ரீமேக்கில் சல்மான்கான் நடித்திருந்தார். இப்படத்தில் தமன்னா நடித்த கதாப்பாத்திரத்தில் பூஜா ஹெக்டே நடித்திருந்தார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கானுடன் இணைந்து தென்னிந்திய பெண்ணாக வந்து பூஜா ஹெக்டே அசத்தினார். இப்படம் பாக்ஸ் ஆபிஸிற்கே சோதனையை தந்தாலும், பூஜா ஹெக்டேவின் மார்க்கெட்டிற்கு எந்த பங்கமும் வரவில்லை. புட்ட பொம்மா கொடுத்த வைப் குறையாமல் பார்த்துக்கொண்டார். அந்தளவிற்கு ரசிகர்கள் அவர் மீது அதீத அன்பு வைத்திருந்தனர்.

retro-audio-launch-pooja-hegdes-dance-to-the-song-kanima-goes-viral

ஜிகிலு ராணியாக குத்தாட்டம்: பின்னர், ராம்சரண் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் படத்தில் இடம்பெற்ற ஜிகிலு ராணி பாட்டிற்கு குத்தாட்டம் போட்டிருந்தார் பூஜா ஹெக்டே. மஞ்சள் புடவையில் ஹீரோயின்கள் நடனம் ஆடுவது வழக்கம் தான். இந்த ஒரு பாட்டில் பூஜா ஹெக்டே ஒட்டுமொத்த பெயரையும் தன்வசப்படுத்தி கொண்டார். ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் விழாக்களி, கச்சேரி மேடைகளில் ஜிகிலு ராணி பாடல்களே அதிகம் ஒலிக்க தொடங்கின. ஹீரோயினாக நடித்து கொண்டே மற்ற முன்னணி நடிகைகளான காஜல் அகர்வால், தமன்னா போன்று ஒரு பாட்டிற்கு வந்து குத்தாட்டம் போட்டு பாணியை பாலோவ் செய்தார். ஒரு படத்தில் நடிக்கும் சம்பளத்தை காட்டிலும் ஒரு பாட்டில் சம்பாதித்தார். அதேபோன்று எப்3 படத்திலும் ஒரு பாட்டிற்கு நடனம் ஆடினார். இப்பாடலும் ஹிட் பாடலாக அமைந்தது. பூஜா ஹெக்டே எப்போதும் ரசிகர்கள் தன் முகம் மறக்காத வண்ணம் பார்த்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

retro-audio-launch-pooja-hegdes-dance-to-the-song-kanima-goes-viral

அரபிக்குத்து நடன அசைவு: நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் மீண்டும் கால்பதிக்க முயற்சித்த பூஜா ஹெக்டேவிற்கு விஜய் படத்தில் நடிக்க ஜாக்பாட் அடித்தது. பீஸ்ட் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தவர் சாதாரணமாக வரவில்லை, ஆட்டம் பாட்டம் என எல்லாவற்றிற்கும் தயாராக வந்திருந்தார். விஜய்யின் ஐகானிக்கான ஆட்டத்திற்கு மத்தியில் பூஜா ஹெக்டே கொத்தா தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து சென்றார். பலரும் முயற்சித்தாலும் அரபிக்குத்து பாட்டிற்கு அவரை போன்ற நடன அசைவுகளை யாராலும் ரீ கிரியேட் செய்ய முடியவில்லை. இங்கே என்ன சொல்லுது பூஜா பூஜா சொல்லுதா என்ற அளவிற்கு அவரது நடனம் மக்கள் மனதை கவர்ந்திருக்கிறது. தற்போது தமிழில் கவனம் செலுத்தி வரும் பூஜா ஹெக்டே சூர்யாவுடன் ரெட்ரோ, மீண்டும் விஜய்யுடன் ஜனநாயகன் படங்களில் நடித்து வருகிறார்.

கனிமாவை ரசிக்கும் மக்கள்: பூஜா ஹெக்டே நடிப்பில் அடுத்து ரெட்ரோ படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் கண்ணாடி பூக்கள், கனிமா பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் கலக்கி வருகிறது. சமூகவலைதள பக்கம் சென்றாலே கனிமா பாட்டுதான் ஒலிக்கிறது. கனிமா பாட்டிற்கு ரசிகர்கள் ரீல்ஸ் வீடியோக்களாக எடுத்து பதிவேற்றி வருகின்றனர். படத்தை தாண்டி பெரிதாக பேசாத பூஜா ஹெக்டே ரெட்ரோ படத்திற்காக அவர் அளித்த பேட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கனிமா பாடல்கள் இந்த அளவிற்கு கொண்டாடுவார்கள் என்று தெரியவில்லை. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என பூஜா தெரிவித்தார். மேலும், ரெட்ரோ இசை வெளியீட்டு விழாவிலும் பூஜா ஆடிய கனிமா பாடலை ரசிகர்கள் திரும்ப திரும்ப பார்த்து ரசித்து வருகின்றனர். இதை எப்படி இவரால் செய்ய முடிந்தது என்பது தான் பலரும் வியந்து பார்க்கும் ஆச்சரியமாக இருக்கிறது.

3 கோடி பாலோவர்ஸ்: சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், ரெட்ரோ முழுக்க முழுக்க காதல் படம். 50% கேங்ஸ்டர் படம் என தெரிவித்திருக்கிறார். மேலும், எனக்கு இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 3 கோடி பாலோவர்ஸ் உள்ளார்கள். அதற்காக என் படத்திற்கு 3 கோடி டிக்கெட் விற்கும் என்ற உத்தரவாதம் இல்லை. பிரபலங்களுக்கு 50 லட்சம் இன்ஸ்டா பாலோவர்ஸ் இருப்பார்கள். ஆனால், அவர்கள் படங்களுக்கு அதிக கூட்டம் கூடும். எனவே சமூக ஊடகங்கள் உண்மையான உலகம் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார். கனிமா பாடல் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்து வரும் பூஜா ஹெக்டே தென்னிந்தியாவே இவங்கதான் என்ற அளவிற்கு உயரத்தை தொட்டிருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. இளம் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் நடிகையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X