தமிழ்நாட்டையே கனிமா பாட்டுக்கு ஆடவச்சிட்டு.. பூஜா ஹெக்டே பவ்யமா எங்கே போயிருக்காங்கனு பாருங்க!

திருப்பதி: நடிகை பூஜா ஹெக்டே,தற்போது தென்னிந்திய சினிமாவில் இருக்கும் டாப் நடிகைகளில் ஒருவராக உள்ளார். தமிழில் தற்போது விஜய், சூர்யா ஆகியோருடன் இணைந்து நடித்து வருகிறார். இது மட்டும் இல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பூஜா ஹெக்டே திருப்பதியில் தனது குடும்பத்தினருடன் கடவுள் தரிசனம் செய்துள்ளார்.

பூஜா ஹெக்டே தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்னர் தெலுங்கு சினிமாவில் தரமான நடனத்தை ஆடும் நடிகைகளில் ஒருவர். இவர் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து நடனமாடிய பாடலான முட்ட பம்மா பாடல் உலக அளவில் டிரெண்ட் ஆனது. குறிப்பாக இந்த பாடலின் நடன அசைவுகள் இணையத்தில் வேகமாக பரவியது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர் டேவிட் வார்னரே ரீல்ஸ் செய்து பகிர்ந்தார். இந்தியாவுக்கு அவர் எப்போது விளையாட வந்தாலும் அந்த பாடல் அவருக்காக மைதானத்தில் ஒலிக்கப்படுகிறது.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, நடிகை பூஜா ஹெக்டே தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மாறியுள்ளார். சூர்யாவோடு, ரெட்ரோ படம். விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். இப்படி இருக்கும்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படமான கூலி படத்தில் ஒரு நடனத்தில் நடித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் கேமியோ கதாபாத்திரமாக வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

Retro Movie Actress Pooja Hegde In Tirupati Temple With Her Family

பூஜா ஹெக்டே: இதில் கூலி படத்தின் அப்டேட் இன்று அதாவது, ஏப்ரல் 4ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. இதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளார்கள். வரும் மே மாதம் முதல் தேதியில், சூர்யாவுடன் இவர் இணைந்து நடித்த படமான ரெட்ரோ படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இதுவரை படக்குழு தரப்பில் இருந்து, இரண்டு பாடல்களும் ஒரு டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்த மூன்றுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

ரெட்ரோ: அதிலும் குறிப்பாக ரசிகர்கள் மத்தியில் கனிமா பாடல் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல், ரசிகர்கள் அந்த பாடலை இன்ஸ்டாகிராமில் அதிகம் ரீல்ஸ் செய்து பகிர்ந்து வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த பாடலுக்கு பூஜா ஹெக்டேவும் சூர்யாவும் இணைந்து ஆடியுள்ள ஆட்டம் மொத்த தமிழ்நாட்டையும் ஆட்டம் போட வைத்தது. இப்படியான நிலையில் பல திரைப்பிரபலங்களுமே அந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்து வெளியிட்டு இருக்கிறார்கள்.

Retro Movie Actress Pooja Hegde In Tirupati Temple With Her Family

தரிசனம்: இந்நிலையில், பூஜா ஹெக்டே திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று தரிசனம் செய்துள்ளார். தரிசனத்திற்கு பின்னர், செய்தியாளர்களை சந்தித்த பூஜா ஹெக்டே, நீண்ட நாட்களாக, இங்கு வரவேண்டும் என்ற எண்ணம் எனது மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. தற்போது குடும்பத்துடன் வந்து, மிகவும் மனத்திருப்தியுடன் கடவுள் தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், நான் மிகவும் கொடுத்தவைத்தவளாக உணர்கிறேன். இங்கு வந்தது ஆத்ம திருப்தியாக உள்ளது. மே முதல் தேதியில் எனது ரெட்ரோ படம் வெளியாகவுள்ளது" எனவும் பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X