Revathy: எனக்கு நடந்தது.. மறக்கவே முடியாத ரணம்.. ரேவதி மனம் திறந்த பேட்டி!

சென்னை: அனுபவ் சின்ஹான இயக்கத்தில் டாப்ஸி பன், ரேவதி,கனி குஸ்ருதி, ரேவதி, மனோஜ் பஹ்வா, குமுத் மிஸ்ரா, ஜீஷன் அய்யூப் ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் 'அஸ்ஸி'. மேலும், இப்படத்தில் நசிருதீன் ஷா, சுப்ரியா பதக் மற்றும் சீமா பார்கவா ஆகியோர் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளனர். இப்படம் பிப்ரவரி 20ந் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இப்படம் குறித்து நடிகை ரேவதி யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், 'அஸ்ஸி' என்பது தமிழில் 80 என்று அர்த்தம். ஒவ்வொரு நாளும் இந்தியாவில், பெண்களுக்கு எதிராக குறைந்தபட்சமாக 80 வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால், FIR போடப்படாத வழக்குகள் பல இருக்கிறது. ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு ஒரு பெண் பாதிக்கப்படுகிறாள். அதை சுட்டிக் காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் படத்திற்கு இந்த தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அந்தப் படத்தினுடைய கதையே பாதிக்கப்பட்ட பெண்ணினுடைய பயணத்தை பற்றி தான்.

நடிகை ரேவதி: சிறுவர் சிறுமிகளுக்கு பள்ளிகளில் 'குட் டச் பேட் டச்' பற்றி இப்போது சொல்லிக் கொடுக்கிறார்கள். சொல்லிக் கொடுத்தாலும், சொல்லிக் கொடுக்கவில்லை என்றாலும், நம்முடைய உடம்பிற்கு தெரியும், அவர்கள் நல்ல எண்ணத்தில் தொடுகிறார்களா? இல்லை கெட்ட எண்ணத்தில் தடவிினார்களா? என்று தெரியும். இதனால் தவறான எண்ணத்தில் ஒருவர் தொட்டால் அதை தைரியமாக வெளியில் சொல்ல வேண்டும் என்பதை தான் நாம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறோம்.

Revathi Women interview
Photo Credit:

மறக்கவே முடியாத ரணம்: ஒரு பெண் இதுபோன்று எதாவது நடந்துவிட்டது என்று சொன்னால், முதலில் அவளிடம் கேட்பது. நீ எதுக்கு இந்த டிரஸ் போட்ட, இப்படி டிரஸ் போட்டா அப்படித்தான் நடக்கும் என்று தான் கேள்வி கேட்கிறார்கள். இதனால் தான் பல பெண்கள் இதுபோன்ற சம்பவங்களை வெளியில் சொல்ல பயந்து அதை மனதுக்குள் வைத்து, மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். ஒரு பெண்ணின் உடலை ஒருவன் தவறாக தொடுவதை, அந்த பெண்ணால் வாழ்க்கையில் மாறக்கவே முடியாத ரணமாகிவிடும். இதனால், இதுபோன்ற நேரங்களில் பெற்றோர், குழந்தைகளுக்கு துணையாக இருக்க வேண்டும். யாராவது தவறாக நடந்து கொண்டால் அவர்களை அந்த இடத்திலேயே அடிக்க என்று சொல்லி கொடுக்க வேண்டும்.

நடுரோட்டில் அடித்தேன்: நான் 11 வது படித்துக்கொண்டு இருக்கும் போது, பேருந்தில் என்னை ஒருவன் தவறாக தொட்டான், நான் யாருக்கும் பயப்படவில்லை, அவனை அந்த இடத்திலேயே பளாரென அடித்தேன். அப்போது அங்கிருந்த அனைவரும் எனக்கு துணையாக இருந்தார்கள். அந்த தைரியத்தை எனக்கு கொடுத்தது என் அம்மா, யாராவது தவறாக நடந்து கொண்டால், பயப்படாமல் தைரியமாக அடி என்றார்கள். அதைத்தான் நான் அன்று செய்தேன். இதுபோல ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களின் பெற்றோர் பக்கபலமாக இருக்க வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X