»   »  விளம்பரத்தில் நடிக்க இந்த நடிகைகள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

விளம்பரத்தில் நடிக்க இந்த நடிகைகள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகைகள் விளம்பர படங்களில் நடிக்க வாங்கும் சம்பளத்தை கேட்டால் இப்பவே உங்களுக்கு எல்லாம் கண்ணை கட்டிக் கொண்டு வரும்.

பாலிவுட் நடிகர்கள் விளம்பரப் படங்களில் நடிக்க பெரிய தொகையை சம்பளமாக வாங்குகிறார்கள். அவர்களுக்கு நாங்கள் சற்றும் குறைந்தவர்கள் இல்லை என நிரூபித்துள்ளனர் பாலிவுட் நடிகைகள். சில நொடிகள் நடிக்க கோடிகளில் சம்பளம் வாங்குகிறார்கள்.

விளம்பர படங்களில் நடிக்க அவர்கள் வாங்கும் சம்பள விவரம் வருமாறு,

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய் சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காவிட்டாலும் விளம்பர உலகின் முடிசூடா ராணியாக அவர் உள்ளார் என்றே கூற வேண்டும். அவர் விளம்பர படங்களில் நடிக்க ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ரூ.1 முதல் 1.5 கோடி சம்பளம் வாங்குகிறார்.

தீபிகா படுகோனே

தீபிகா படுகோனே

பாலிவுட்டின் ஹிட் நாயகி என்று யாரைக் கேட்டாலும் அவர்கள் தீபிகா படுகோனேவை தான் கை காட்டுவார்கள். அந்த அளவுக்கு அடுத்தடுத்து அவரது படங்கள் ஹிட்டாகிக் கொண்டிருக்கிறது. அவர் விளம்பர படத்தில் நடிக்க நாள் ஒன்றுக்கு ரூ.2 கோடி மட்டுமே பெறுகிறார்.

கத்ரீனா கைஃப்

கத்ரீனா கைஃப்

கத்ரீனா கைஃப் அடிக்கடி படங்களில் நடிக்காவிட்டாலும் விளம்பரப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் நாள் ஒன்றுக்கு ரூ.1.25 முதல் 1.75 கோடியை சம்பளமாக கேட்கிறார். அவர் அவ்வளவு கேட்டாலும் சம்பந்தப்பட்டவர்கள் முகம் சுளிக்காமல் அள்ளிக் கொடுக்கிறார்கள்.

ஆலியா பட்

ஆலியா பட்

பாலிவுட் நடிகைகளில் மேல்மாடி குறைவு என்று ரசிகர்கள் அதிகம் கிண்டல் செய்வது ஆலியா பட்டை பார்த்து தான். ஆனால் அவரோ விவரமாக பல விளம்பர படங்களில் நடித்து கல்லா கட்டி வருகிறார். அவர் விளம்பரங்களில் நடிக்க நாள் ஒன்றுக்கு வாங்கும் சம்பளம் ரூ.1 கோடி ஆகும்.

ஷ்ரத்தா கபூர்

ஷ்ரத்தா கபூர்

வளர்ந்து வரும் நடிகையான ஷ்ரத்தா கபூரும் விளம்பர உலகிற்கு வந்துவிட்டார். கத்ரீனா கைஃப் நடித்து வந்த வீட் விளம்பரத்தில் தற்போது ஷ்ரத்தா தான் வருகிறார். அவர் விளம்பரத்தில் நடிக்க நாள் ஒன்றுக்கு ரூ.60 முதல் 70 லட்சம் பெறுகிறார்.

அனுஷ்கா

அனுஷ்கா

பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் விளம்பர படங்களில் நடிப்பதை மட்டும் கைவிடாதவராக இருந்தார் அனுஷ்கா சர்மா. தற்போது அவர் கையில் படங்களும் உள்ளன, ஏராளமான விளம்பர படங்களும் உள்ளன. அவரின் ஒரு நாள் சம்பளம் ரூ.60 முதல் 70 லட்சம்.

பிரியங்கா

பிரியங்கா

ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களும் ரூ.100 கோடி வசூலிக்கும் என்பதை மேரி கோம் படம் மூலம் நிரூபித்தவர் பிரியங்க சோப்ரா. அவர் விளம்பர படங்களில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ.1 முதல் 1.3 கோடி வாங்குகிறார்.

கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத்

ஹிட் அதன் பிறகு பிளாப் என்று ஒரு நிலையில் இல்லாத கங்கனா ரனாவத் இரண்டு தேசிய விருதுகள் பெற்ற நடிகை ஆவார். அவர் விளம்பரத்தில் நடிக்க நாள் ஒன்றுக்கு ரூ.50 லட்சம் மட்டுமே பெறகிறார்.

English summary
Bollywood actors may be raking in huge moolah when it comes to movies they star in or for the brands they endorse, but that doesn't mean our Bollywood beauties are charging any less.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil