சுஷாந்த் சிங் மறைந்து ஒரு மாதத்துக்குப் பின் ஹேப்பி போட்டோ.. வாட்ஸ்அப் டிபி-யை மாற்றிய காதலி!
மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் மறைந்து ஒரு மாதம் ஆன நிலையில் தனது வாட்ஸ் அப் டிபியை அதிரடியாக மாற்றி இருக்கிறார், அவரது காதலியான ரியா சக்கரவர்த்தி.
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த மாதம் 14 ஆம் தேதி தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர், கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கைக் கதையில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர்.

தில் பெச்சாரே
கை போ சே என்ற இந்தி படம் மூலம் நடிகராக அறிமுகமான சுஷாந்த் சிங், சுத் தேஸி ரொமான்ஸ், ஆமீர்கானின் பிகே ஆகிய படங்களில் நடித்தார். ராப்தா, வெல்கம் நியூயார்க், சிச்சோர், கேதார்நாத், டிரைவ் ஆகிய படங்களில் நடித்தார். இந்தப் படங்கள் அவருக்குப் பெயரை பெற்றுத் தந்தன. இப்போது தில் பச்சாரே என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ஒடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

ரியா சக்கரவர்த்தி
மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அவர் தற்கொலைக்கான காரணம் பற்றி மும்பை பாந்த்ரா போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் காதலி ரியா சக்கரவர்த்தி, இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி உட்பட பல நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், சுஷாந்துடன் நடித்தவர்கள் என 29 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

கதறி அழுவார்
நடிகை ரியா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், 'சுஷாந்துக்கு மன அழுத்தப் பிரச்னை இருந்தது. அவர் அதை வெளியில் சொன்னதே இல்லை. இதற்காக அவர் சிகிச்சைப் பெற்று வந்தார். அவர் அடிக்கடி தன்னை தனிமைப்படுத்திக் கொள்வார். பலமுறை அப்படி செய்திருக்கிறார். சில வேளை, கதவை பூட்டிக் கொண்டு பல மணிநேரமாக கதறி அழுவார்' என்று தெரிவித்திருந்தார்.

வாட்ஸ் அப் டிஸ்பிளே
சுஷாந்த் சிங் மறைவை அடுத்து பாலிவுட்டில் நெபோடிசம் குறித்த விவாதம் தொடங்கியுள்ளது. திறமையில்லாத சினிமா பிரபலங்களின் வாரிசுகளால், மற்றவர்களின் வாய்ப்பு பறிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பலர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டு இன்றோடு ஒரு மாதம் ஆகிறது.

மகிழ்ச்சி புகைப்படம்
மறைந்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், தனது வாட்ஸ் அப் டிஸ்பிளேவில், சுஷாந்த் சிங்குடன் தான் இருக்கும் மகிழ்ச்சியான புகைப்படத்தை வைத்துள்ளார் ரியா சக்கரவர்த்தி. சுஷாந்த் சிங் பற்றி உருக்கமானப் பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்த ரியா, சுஷாந்தின் இறுதிச் சடங்கிலும் கலந்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











