'லண்டன் மாப்பிள்ளை'யுடன் கோலிவுட் களத்தில் குதிக்கும் ரிதமிகா!
சென்னை: பார்க்க பளிச் பளீரென மின்னும் ரிதமிகாதான், கோலிவுட்டுக்கு புதிதாக வந்து சேர்ந்துள்ள இளம் நடிகை.

முதலில் மாடல் - அப்புறம் சினிமா
முதலில் ரிதமிகா ஒரு மாடல் அழகி. அதன் பின்னர்தான் அவர் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தாராம். மாடலிங் அனுபவம், ரிதமிகாவுக்கு சினிமாத்துறையின் ரிதம் குறித்த நிறைய அறிவைக் கொடுக்க உதவியுள்ளதாம்.

லண்டனில் மாப்பிள்ளையுடன்...!
தெலுங்கு சினிமாவில் அறிமுகமான ரிதமிகா, இப்போது தமிழுக்கும் காலடி எடுத்து வைத்துள்ளார். அவர் நடித்து வரும் முதல் படத்தின் பெயர் லண்டனில் மாப்பிள்ளை.

முதல் ஹீரோ!
தமிழில் ரிதமிகா முதலில் ஜோடி சேர்ந்துள்ள மாப்பிள்ளை அதாவது லண்டன் மாப்பிள்ளை படத்தின் ஹீரோ பெயர் தமன்குமார்.

'புதுப் பொண்ணு' கவர்ச்சிக்கும் ரெடியாம்
முதல் படத்திலேயே கவர்ச்சியிலும் கலக்கியுள்ளாராம் ரிதமிகா. அத்தோடு சினிமாவில் கவர்ச்சி இல்லாமல் எதுவுமே போணியாகாது என்ற தத்துவத்தையும் நன்றாகக் கரைத்துக் குடித்து வைத்திருப்பதால் படு தெளிவாக இருக்கிறார் இந்தப் புதுப் பொண்ணு.


Click it and Unblock the Notifications











