பிகினி உடையில் முட்டிப்போட்டு பிரபல நடிகை கொடுத்த போஸ்.. க்ளீன் போல்டான இளசுகள்!
மும்பை : பாரதிராஜாவின் தாஜ்மஹால் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ரியா சென்.
தமிழில் தொடர்ந்து பல படங்களில் நடிக்க முடியவில்லை என்றாலும் சில படங்களிலேயே தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி கொண்டவர்.
ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் பட்டையை கிளப்பி வரும் ரியா சென் சமூகவலைதளங்களில் பிகினி புகைப்படங்களை ஓர வஞ்சனை இல்லாமல் வெளியிட்டு வர இப்பொழுது சோபாவில் முட்டிப்போட்டு பிகினியில் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை ரசிகர்கள் ஆராதித்து வருகின்றனர்.

தமிழில் தாஜ்மகால்
இந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் தமிழில் தாஜ்மகால் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ரியா சென் . இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் இதில் ஹீரோவாக அறிமுகம் செய்யப்பட்டார். பாரதிராஜாவின் படங்களில் வழக்கமாக அறிமுகப்படுத்தப்படும் ஹீரோயின்களின் ரேஞ்சுக்கு ரியா சென் மீதும் தமிழ் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.

சிட்டி கேர்ளாக அசத்தியவர்
தாஜ்மஹால் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என்றாலும் முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான பாராட்டுக்கள் கிடைத்தன. அதைத்தொடர்ந்து பிரசாந்துடன் இணைந்து குட்லக் படத்திலும் நடித்திருந்தார். முதல் படத்தில் கிராமத்து கதையில் நடித்து விட்டு இரண்டாவது படத்திலேயே சிட்டி கேர்ளாக அசத்திய ரியா சென் அதன்பின் என்னவோ தெரியவில்லை தமிழில் தொடர்ந்து படங்கள் எதுவும் அமையவில்லை.

வெப்சீரிஸ்களிலும்
அதன்பின் ஹிந்தியில் நடிக்க ஆரம்பித்தவருக்கு கதாநாயகி ரோலில் மட்டுமல்லாமல் ஒரு சில சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலமானவர் தெலுங்கு, மலையாளம், ஒரியா,பெங்காளி உள்ளிட்ட மொழிகளிலும் சில படங்களில் நடித்து அங்கும் பிரபலமாக உள்ளார்.இப்பொழுது இந்தியில் மட்டும் கவனம் செலுத்தி வரும் ரியா சென் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் வெப்சீரிஸ்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க ராகினி எம்எம்எஸ்,பாய்சன்,மிஸ் மேட்ச் 2 மற்றும் சென்ற ஆண்டு வெளியான படி பட்னி அவுர் வோ என இவர் நடித்த வெப்சீரிஸ்களின் எண்ணிக்கை தொடர்ந்து கொண்டே போகிறது.

விவகாரமாக போஸ்
ஏற்கனவே பல சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடித்து திரைத்துறையை அதிர வைத்தவர் சமூக வலைத்தளங்களையும் விட்டு வைக்கவில்லை. எக்குத்தப்பான ஹாட்டான புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு இணையதளத்தை துவம்சம் செய்து வரும் ரியா சென் இப்பொழுது கை ரோஸ் ஸ்டைல் வைத்த கருப்பு பிகினியில் தொடையழகு தெரிய சோபாவில் முட்டிபோட்டு விவகாரமாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஹோலி வாழ்த்துக்களை கூறி சூடேற்றி உள்ளார்.


Click it and Unblock the Notifications