காதலில் ரிச்சா?
தமிழில் காணாமல் போன ரிச்சா பலோட் மீண்டும் வருகிறார். கூடவே காதலோடு அவர் வந்துள்ளதாக கோலிவுட்டில் குசுகுசுக்கிறார்கள்.
விஜய்யுடன் நடித்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர் ரிச்சா பலோட். அந்தப் படம் ஊத்திக் கொள்ளவே ராசியில்லாத நடிகைகள் வரிசையில் சேர்ந்தார் ரிச்சா. பின்னர் அவரைப் போலவே ராசியில்லாத நடிகராக அறியப்பட்ட மனோஜுடன் இணைந்து சரண் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்தார்.அத்தோடு சரி, இரண்டு பேருமே ஒட்டுக்காக பீல்டு அவுட் ஆகிப் போனார்கள். அதன் பின்னர் மீண்டும் தமிழ்ப் படத்தில் தனது அதிர்ஷ்டத்தைப் பார்க்க விரும்பவில்லை ரிச்சா.
இந்த நிலையில், மீண்டும் தமிழுக்கு வருகிறார் ரிச்சா பலோட். படத்தின் பெயர் நல்வரவு. இதில் மதுமிதாவும் இருக்கிறார். ரிச்சா முதல் நாயகியாம், மது இரண்டாவது நாயகியாம். மதுவும் இப்படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார்.
இதில் ஹீரோவாக நடிப்பவர் வேணு. புதுமுகமான இவரும், ரிச்சாவும் படு நேசமாக இருக்கிறார்கள் என்பதுதான் இப்போது மேட்டர். சமீபத்தில் ஸ்டண்ட் காட்சியை படமாக்கியபோது வேணு காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை கூடவே இருந்து பத்திரமாக பார்த்துக் கொண்டாராம் ரிச்சா.
இதனால் இருவரையும் இணைத்து கிசுகிசு கிளம்பி விட்டது. இருந்தாலும் இதுகுறித்து கவலைப்படாமல் தொடர்ந்து வேணுவுடன் நட்பாக இருந்து வருகிறாராம் ரிச்சா.
ரிச்சா மீண்டும் நடிக்க வந்தது கலக்கவா அல்லது காதலிக்கவா?


Click it and Unblock the Notifications











