கிளாமர் செல்ஃபி ஸ்டில்ஸ்.. அதிரடியாக வெளியிட்ட ஹீரோயின்.. மாடர்ன் ஸ்மிதா என வர்ணிக்கும் ஃபேன்ஸ்!
மும்பை: கிளாமர் செஃல்பி புகைப்படங்களை வெளியிட்டுள்ள பிரபல நடிகையை மாடர்ன் ஸ்மிதா என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Recommended Video
இந்தியில், கேங்ஸ் ஆஃப் வாஸிபுர், பக்ரி, தாஸ் தேவ், பக்ரி ரிட்டர்ன்ஸ், பங்கா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் ரிச்சா சத்தா.
அமேசான் பிரைமில் வெளியான இன்சைட் எட்ஜ் என்ற வெப் சீரிஸிலும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

ஷகிலா பயோபிக்
தமிழ், மலையாளம், தெலுங்கு சினிமாவில் கிளாமராக நடித்து புகழ்பெற்ற நடிகை ஷகிலாவின் வாழ்க்கை கதை சினிமாவாகி வருகிறது. இந்திரஜித் லங்கேஷ் இயக்கும் இந்த பயோபிக் படத்தில் நடிகை ஷகிலாவாக நடித்து வருகிறார் ரிச்சா. இந்தப் படத்தின் போஸ்டர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றன.

நடிகர் அலி ஃபைசல்
இவர், கான் திரைப்பட விழாவில் சந்தித்த, பிரான்ஸை சேர்ந்த பிராங்க் காஸ்டம்பைட் என்பவரை 2015 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்தார். இது அப்போது பாலிவுட்டில் பரபரப்பானது. ஆனால், ஒரே வருடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக, இவர்கள் காதல் முறிந்தது. இதையடுத்து பக்ரி படத்தில் ரிச்சாவுடன் நடித்த, நடிகர் அலி ஃபசலை காதலித்து வருகிறார்.

கிளாமர் செல்ஃபி
இவர்கள் இருவரும் இந்த மாதம் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தனர். கொரோனா லாக்டவுன் காரணமாக, இவர்கள் திருமணம் தள்ளிப் போயிருக்கிறது. இதனால் வீட்டில் இருக்கும் நடிகை ரிச்சா, மற்ற நடிகைகளை போல, சமூக வலைத்தளங்களில் வீடியோ, மற்றும் புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.

மாடர்ன் ஸ்மிதா
இப்போது சில கிளாமர் செல்ஃபி ஸ்டில்களை எடுத்துள்ள ரிச்சா, அதில் மூன்று ஸ்டில்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. வழக்கம் போல இதற்கு, ஆஹா, அசத்தல், அற்புதம், செம என்று ரசிகர்கள் தங்கள் கமென்ட்களை அள்ளித் தெளித்துள்ளனர். சிலர், எப்ப கல்யாணம்? அலி பாய் அதிர்ஷ்டசாலி என்று கலாய்த்துள்ளனர். ஒருவர் மாடர்ன் ஸ்மிதா பட்டீல் என்று வர்ணித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











