இன்ஸ்டாகிராமில் தன் பெயரில் போலி கணக்குகள்... வேகமாக வந்து ட்விட்டரில் விளக்கம் அளித்த, 'நெடுவாலி'!
சென்னை: இன்ஸ்டாகிராமில் தனது பெயரில் போலி கணக்குகள் இருப்பதாக பிரபல ஹீரோயின் விளக்கம் அளித்துள்ளார்.
தெலுங்கில் ராணா நடித்த லீடர் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரிச்சா கங்கோபத்யாய்.
அடுத்து தெலுங்கு படங்களில் நடித்த அவர், தமிழில் மயக்கம் என்ன படம் மூலம் அறிமுகமானார்.

சிம்பு ஜோடி
செல்வராகவன் இயக்கிய இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார். சுந்தர் ராமு, பூஜா தேவரியா உட்பட பலர் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்திருந்த இந்தப் படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்தப் படம் கவனிக்கப்பட்டது. இதையடுத்து சிம்பு ஜோடியாக ஒஸ்தி படத்தில் நடித்தார், ரிச்சா. இதை தரணி இயக்கி இருந்தார்.

நடிப்பை நிறுத்தினார்
இது, இந்தியில் சல்மான்கான் நடித்து சூப்பர் ஹிட்டான தபாங் படத்தின் ரீமேக். இதில் நெடுவாலி என்ற கேரக்டரில் நடித்திருந்தார், ரிச்சா. இந்தப் படம் பெரிய ஹிட்டாகவில்லை என்றாலும் ரிச்சாவின் நடிப்பு பேசப்பட்டது. இதையடுத்து, மேலும் சில தெலுங்கு படங்களில் நடித்த ரிச்சா, நடிப்பதை திடீரென நிறுத்தி விட்டு அமெரிக்காவில் எம்.பி.ஏ. படித்தார்.
This is my ONLY IG account: @richalangella
— Richa Langella (Gangopadhyay) (@richyricha) April 13, 2020
All other accounts- even if they look real and post my stuff- are fake. I just started and only have 6 posts. Thanks everyone :) waiting for verification from @instagram pic.twitter.com/WZduLK8Cfn
திருமணம்
அப்போது கல்லூரியில் தன்னுடன் படித்த சக மாணவரான ஜோ லாங்கெல்லா (Joe Langella) என்பவரை காதலித்தார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைத் தளங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி வைரலாயின. இதையடுத்து அவர்களுக்கு ரசிகர்களும் திரை பிரபலங்களும் வாழ்த்துத் தெரிவித்தனர்.

இன்ஸ்டாகிராம் கணக்கு
இந்நிலையில், தனது உண்மையான இன்ஸ்டாகிராம் கணக்கு இதுதான் என்று தெரிவித்துள்ளார், ரிச்சா. இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், 'இதுதான் எனது உண்மையான ஒரே ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கு. மற்றவை போலியானவை. அவை என்னை பற்றிய செய்திகளை உண்மை போலவே வெளியிட்டாலும் போலியானவை. நான் இப்போதுதான் இன்ஸ்டா கணக்கைத் தொடங்கி இருக்கிறேன். வெறும் 6 பதிவுகள் மட்டுமே போட்டிருக்கிறேன். அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











