லாக்டவுன் நேரத்திலும் பிக்னிக் சென்ற பிரபல ஹீரோயின்.. காதல் கணவருடன் மீன் பிடித்து கொண்டாட்டம்!
சென்னை: லாக்டவுன் நேரத்திலும் பிரபல நடிகை தனது கணவருடன் பிக்னிக் சென்றுள்ளார்.
Recommended Video
தெலுங்கில் ராணா நடித்த லீடர் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரிச்சா கங்கோபத்யாய்.
தொடர்ந்து அங்கு நடித்து வந்த அவர், தமிழில் மயக்கம் என்ன படம் மூலம் அறிமுகமானார்.

சிம்புவின் ஒஸ்தி
செல்வராகவன் இயக்கிய இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார். சுந்தர் ராமு, பூஜா தேவரியா உட்பட பலர் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்திருந்த இந்தப் படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்தப் படம் கவனிக்கப்பட்டது. இதையடுத்து சிம்பு ஜோடியாக ஒஸ்தி படத்தில் நடித்தார். இதை தரணி இயக்கி இருந்தார்.

அமெரிக்கா
இது, இந்தியில் சல்மான்கான் நடித்து சூப்பர் ஹிட்டான தபாங் படத்தின் ரீமேக். இதில் நெடுவாலி என்ற கேரக்டரில் நடித்திருந்தார், ரிச்சா. இந்தப் படம் பெரிய ஹிட்டாகவில்லை என்றாலும் ரிச்சாவின் நடிப்பு பேசப்பட்டது. இதையடுத்து, மேலும் சில தெலுங்கு படங்களில் நடித்த ரிச்சா, நடிப்பதை திடீரென நிறுத்தி விட்டு அமெரிக்காவில் எம்.பி.ஏ. படித்தார்.

காதல் திருமணம்
கல்லூரியில் தன்னுடன் படித்த சக மாணவரான ஜோ லாங்கெல்லா என்பவரைக் காதலித்தார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி வைரலாயின. இதையடுத்து அவர்களுக்கு ரசிகர்களும் திரை பிரபலங்களும் வாழ்த்துத் தெரிவித்தனர்.

லாக்டவுனிலும் பிக்னிக்
இந்நிலையில், இந்த லாக்டவுன் நேரத்திலும் கணவருடன் பிக்னிக் சென்றுள்ளார் ரிச்சா. இதுபற்றி தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். கலிபோர்னியாவின் எல்லையில் உள்ள ஒரேகான் கடற்கரை பகுதிக்கு சென்றுள்ள ரிச்சா, அங்கு ஜாலியாக பொழுதை கழித்துள்ளார். கூடவே சமூக இடைவெளியை கடைபிடித்தார்களாம்.

கணவருடன் மீன் பிடிப்பு
அவர் வசிக்கும் இடத்தின் பிக்பக்கத்தில்தான் இருக்கிறதாம், இந்த இடம். வீட்டிலிருந்து 30 நிமிடம் டிரைவ் செய்தால், இந்த இடத்துக்குச் சென்றுவிடலாம் என்று தெரிவித்திருக்கிறார். அங்கு ஓரேகான் ஆற்றில் ரிச்சாவும் அவர் கணவரும் மீன் பிடித்தார்களாம். சரியான கணவரைத் திருமணம் செய்திருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார், ரிச்சா.


Click it and Unblock the Notifications











