ஒஸ்தி ரிச்சா அமெரிக்க காதலர் ஜோ லாங்கெல்லாவை மணந்தார்

சென்னை : ரிச்சா கங்கோபத்யாய தனது காதலரான அமெரிக்காவை சேர்ந்த ஜோ லாங்கெல்லாவை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் கிறிஸ்துவ முறைபடியும் மற்றும் இந்து முறைப்படியும் நடந்தது.

தமிழில் ஒஸ்தி என்ற படத்தின் மூலம் நெடுவாலியாக தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் ரிச்சா கங்கோபத்யாய. தெலுங்கு திரையுலகில் இருந்து தமிழ் சினிமாவிற்குள் கால் பதித்தவர் நடிகை ரிச்சா கங்கோபத்யாய. இவர் நடித்த இரண்டு தமிழ் படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

 Richa gangopadhyaya gets married joe langella

தனுஷ் உடன் 'மயக்கம் என்ன' என்ற படத்தில் நடித்து இருப்பார். அந்த படத்தின் கதையே நாம் இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்திராத கதை அம்சம் கொண்டதாகும். மேலும் அந்த படத்தில் ஒரு சில இடங்களில் இவரின் நடிப்பு அபாரமாக இருக்கும், கர்ப்பிணி பெண்ணாகவும், காதலியாகவும், மனைவியாகவும் என அனைத்துவிதமான ரோல்களிலும் அவரின் நடிப்பு மின்னியது.

 Richa gangopadhyaya gets married joe langella

இதையடுத்து அவருக்கு பல வாய்ப்புகள் வந்தன ஆனால், அவற்றை எல்லாம் அவர் புறக்கணித்தார். சிறந்த படத்திற்கான பிலிம்பேர் விருதும் மற்றும் சைமா விருது, எடிசன் விருது உட்பட பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார் ரிச்சா கங்கோபத்யாய.

 Richa gangopadhyaya gets married joe langella

இந்நிலையில், தனது காதலரான அமெரிக்காவை சேர்ந்த ஜோ லாங்கெல்லா என்பவரை, கிறிஸ்துவ முறைபடியும் மற்றும் இந்து முறைப்படியும் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கையோடு அமெரிக்காவில் செட்டில் ஆக முடிவெடுத்துள்ளார்.

ரிச்சாவின் திருமணப் புகைபடங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இவர்கள் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும் பெற்றோரின் சம்மதத்திற்காக காத்திருந்ததாகவும் தற்போது சம்மதம் கிடைத்ததால் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இவர் இப்படி திடீரென திருமணம் செய்து கொண்டதால் இவரின் ரசிகர்கள் கவலை அடைந்து இருந்தாலும் இவர்களை மனமார வாழ்த்தியும் உள்ளனர்.

More from Filmibeat

Read more about: richa wedding
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X