ஹீரோயின்
விஜய் ஜோடியாக ஷாஜஹானில் நடித்து வரும் ரிச்சாவுக்கு (ரிக்ஷா இல்லீங்கண்ணா, ரிச்சா!) அவரோட அப்பாவும், அம்மாவும் ரிச்சான பாதுகாப்புகொடுத்துள்ளனர்.
ரிச்சா எங்கே போனாலும், வந்தாலும், உட்கார்ந்தாலும், நடந்தாலும் கூடவே இருவரும் இணை பிரியாமல் உடன் இருக்கின்றனர். என்னகாரணமாம்?
விஜய் கூட நடிப்பதால் முதல் படத்திற்குப் பிறகு ரிச்சா பெரிய லெவலுக்குப் போய் விடுவார் என்று ரிச்சாவின் டாடியும், மம்மியும் கணக்குப் போட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களது மனதில் மண்ணைப் போட்டு விட்டார் ரிச்சா.
மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை படத்தில் நடிக்க வருவதற்கு முன்பே மனசுக்குள் வரித்துக் கொண்டிருந்தாராம். இப்போது ஸ்டாராகி விட்டதால்காதலும் தீவிரமாகி விட்டதாம்.
தேவயானி போல சொல்லாமல், கொள்ளாமல் ஓடிப் போக விரும்பாமல், டீசன்டாக தனது பெற்றோரிடம் காதலை கூறியுள்ளாராம். ஆனால்ரிச்சாவிடமிருந்து பணத்தை மட்டுமே எதிர்பார்த்துக் காத்திருந்த பெற்றோருக்கு அவர் இப்படிக் குண்டைத் தூக்கிப் போட்டதும் அதிர்ச்சியாகி விட்டதாம்.
காதலாவது, கத்திரிக்காயவது என்று ரிச்சாவை மிரட்டியுள்ளனர். ஆனால், முடிந்தால் கல்யாணம் பண்ணி வையுங்கள், இல்லாவிட்டால் நானே பார்த்துக்கொள்கிறேன் என்று உருட்டலாக கூறியுள்ளார்.
பயந்து போன பெற்றோர்கள் இப்போது பக்காவாக ரிச்சாவுடன் பக்க துணையாக வந்து கொண்டுள்ளனர்.
ரிக்ஷா.... ஸாரி... ரிச்சா ஓடுவாரா?


Click it and Unblock the Notifications











