அரசியலில் நுழைய ஆழம் பார்க்கும் ரீமா கலிங்கல்!
நடிகை ரீமா கல்லிங்கல் இணையதளங்களில் வெளிப்படையாக கருத்துக்களை சொல்லி அரசியலில் நுழைய ஆயத்தம் ஆவதாக மலையாளத் திரையுலகில் பேசப்படுகிறது.
'யுவன் யுவதி' படத்தில் நடித்தவர் ரீமா கல்லிங்கல். மல்லுவுட்டில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இளம் நடிகைகளின் வரவால் ரீமாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. இதையடுத்து இவர் ஆஷிக் அபு என்ற இயக்குனரை காதலித்து சமீபத்தில் மணந்தார்.
பெரும்பாலும் ஹீரோ அல்லது ஹீரோயின்களிடம் சிக்கலான கேள்விகள் கேட்கும்போது பதில் சொல்லாமல் நழுவிவிடுவார்கள். ஒரு சிலர் விளைவுகள் என்ன வந்தாலும் பரவாயில்லை என்ற முடிவுடன் கருத்துக்களை வெளிப்படையாக சொல்வதுண்டு. அந்த பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்தான் ரீமா கல்லிங்கல்.

டேம் 999 சர்ச்சை
முல்லை பெரியாறு அணையை மையமாக வைத்து உருவான டேம் 999 என்ற படத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தபோது படத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் ரீமா கலிங்கல். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

சமூதாயத்தில் தாக்கம்
இணைய தளங்களிலும் தனக்கென பக்கங்களை உருவாக்கி வைத்திருக்கும் அவர் கருத்துக்களை பகிரங்கமாக தெரிவிக்கிறார். என்னுடைய வார்த்தைகளால் சமுதாயத்தில் என்ன தாக்கம் ஏற்படும் என்று எனக்கு தெரியும். இளைஞர்களிடமும் என்னுடைய வார்த்தைகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரியும் என்று கூறியுள்ளார் ரீமா கலிங்கல்.

நடனப்பள்ளி
இதனிடையே கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் நடன பள்ளி ஒன்றைத் தொடங்கி உள்ளார் ரீமா கலிங்கல். ஹிப் ஹாப், பரதநாட்டியம், குச்சிபுடி, களரி போன்ற நடனங்களுடன் யோகா வகுப்பும் இதில் நடத்துகிறாராம்.

நடிகைகளுக்கு அழைப்பு
திரையுலகில் தனக்கு நெருக்கமான நடிகைகளையும் இப்பள்ளியில் சேர்த்துக்கொள்ள முடிவு செய்துள்ளாராம். இதற்காக சில நடிகைகளுக்கு போன் செய்து, 'நடன பள்ளி தொடங்கியுள்ளேன். உங்களுக்காக (நடிகைகளுக்காக) ஆஃபர் இருக்கிறது. இதில் சேர்ந்து பயன்பெறலாம். சினிமாவில் உங்கள் டான்ஸ் மூவ்மென்ட்ஸ் இம்ப்ரூவ் ஆக எனது பள்ளி உதவியாக இருக்கும்' என நைசாக பேசி அழைப்பு விடுக்கிறாராம்.

நடிகைகள் கமெண்ட்
'பட சான்ஸ் இல்லேன்னாலும் டைரக்டரை கல்யாணம் பண்ணிக்கிட்டு ரீமா செட்டில் ஆயிட்டா. இப்போ பிசினஸ்ல வேற இறங்கிட்டு எங்களுக்கு இம்சை தர்றா' என நடிகைகள் கமெண்ட் அடிக்கின்றனராம்.


Click it and Unblock the Notifications











