»   »  ரிஷா போடும் கிளாமர் ரோடு

ரிஷா போடும் கிளாமர் ரோடு

Subscribe to Oneindia Tamil

ரிஷா, ரொம்பப் பேசக் கற்றுக் கொண்டு விட்டார். குத்தாட்டத்தில் ஆரம்பித்த அவரது கலைச் சேவை இப்போதுஹீரோயின் ரேஞ்சுக்கு எகிறியுள்ளதால் இதுவும் பேசுவார், இன்னும் பேசுவார்.

பார்க்கவே படு கும்மாக இருக்கிறார் ரிஷா. அம்மணியின் கோலிவுட் கிளம்பல் ஒத்தை பாட்டுக்கு ஆடுவதில் தான்ஆரம்பித்தது. இந்த சிங்கிள் பாட்டுக்களுக்கு ரிஷா போட்ட அலம்பலைப் பார்த்து இப்போது கிளாமருடன் கூடியஹீரோயின் வாய்ப்பு ஓடோடி வந்துள்ளது.

ரிஷா ஹீரோயினாக நடிக்கும் முதல் படத்தின் பெயர் நிறம். கூட நடிக்கும் தம்பியின் (அதாங்க ஹீரோ) பெயர்மணி. விதிர்த்து, வியர்த்துப் போகும் அளவுக்கு மணியை ஆட்டிப் படைத்துள்ளாராம் ரிஷா இதில். அம்புட்டுகிளாமர் இப்படத்தில். அமர்க்களம் பண்ணியிருக்கோ.

இப்படி கிளாமர் காட்றேளே, ரொம்பப் பிடிக்குமோ என்று கேட்டால் படு வெவரமா பேசுகிறார் ரிஷா.

இங்கேதான் ஒரு பாட்டுக்கு ஆடும் நாயகிகளுக்கு ஒரு மரியாதை, ஹீரோயின்களுக்கு ஒரு இமேஜ் எனபாகுபாடு இருக்கிறது. ஆனால் குத்தாட்டத்திற்கே பிறந்த நாயகிகளையை அடித்து துவம்சம் செய்யும் அளவுக்குஹீரோயின்களும் கவர்ச்சியில் பின்றாங்க. எனக்கு இது மாதிரியான ஆட்டத்தில் அனுபவம் உள்ளதால்,ஹீரோயினாக நடிப்பதில் சிரமம் இல்லை.

டான்ஸாக இருந்தாலும், நடிப்பாக இருந்தாலும் அளவோடு கிளாமர் காட்டி வளமோடு வாழ முடியும் என்றநம்பிக்கை உள்ளது. அதற்காக ஓவர் கிளாமர் எல்லாம் காட்ட மாட்டேன். எல்லை மீறி காட்டும் கவர்ச்சியைரசிகர்களும் ஒரு கட்டத்திற்கு மேல் விரும்ப மாட்டார்கள், ஒதுக்கி விடுவார்கள்.

எனவேதான் எல்லைக் கோட்டைத் தாண்டாமல் கிளாமர் ரோடு போட விரும்புகிறேன் நான் என்கிறார் படுபதவிசாக.

இப்படித்தான் எல்லோரும் எல்லைக் கோடு, அளவு, லிமிட் என்று ஆரம்பிக்கிறார்கள். ஆனால் எடுத்தஎடுப்பிலேயே டாப் கியருக்குப் போய் டங்கு டணால் ஆகும் அளவுக்கு கிளாமரில் போட்டுத் தாக்கும்ஆட்கள்தான் அதிகம்.

ரிஷா இதில் எப்படிச் செய்தாலும் ரசிகர்களுக்கு ஓ.கே.தான், அல்வாவை எப்படிச் சாப்பிட்டால் என்ன, தித்திப்புஒண்ணுதானே...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil