»   »  பட்டாளத்தில் ரிஷா

பட்டாளத்தில் ரிஷா

Subscribe to Oneindia Tamil

கவர்ச்சி ரீங்காரம் இடும் கிளாமர் வண்டு ரிஷா, ஐவர் பட்டாளம் என்ற புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

குத்துப் பாட்டு நாயகியாக அறிமுகமாகி, அப்படியே ஹீரோயினும் ஆகி விட்ட ரிஷா, கவர்ச்சி காட்டுசங்கோஜப்படுவதே கிடையாது. எப்படின்னாலும் எனக்கு ஓ.கே.தான் என்று படு உற்சாகமாக கூறுகிறார்.

கிளாமராக நடிப்பதெல்லாம் பாவமோ, தப்போ கிடையாது. அதற்கும் ஒரு திறமை வேண்டும். அந்தத் திறமையும்,தகுதியும் என்னிடம் நிறையவே கொட்டிக் கிடக்கிறது. அள்ளிக் கொள்ளும் திறமை படைத்தவர்கள் தாராளமாககில்லி ஆடலாம் என்று அவர் விடும் ஸ்டேட்மெண்ட் உரியவர்களைப் போய் சேர்ந்துள்ளது. அதனால்தான்அடுத்தடுத்து ஹீரோயின் வாய்ப்பு ரிஷாவிடம் ரீச் ஆகி வருகிறது.

ரிஷா புதிதாக ஹீரோயினாக அறிமுகமாகியுள்ள படம்தான் ஐவர் பட்டாளம். நித்தின் என்பவரை புதுமுகஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார்கள். இவர் வேறு யாருமல்ல, முன்னாள் நாயகி, மூக்கழகி மோகினியின்தம்பிதான் இவர்.

ரிஷாவே ரிச்சாக கவர்ச்சி காட்டுவார் என்றாலும் எதற்கும் இருக்கட்டுமே என்று சுரேகா, சுமா என இரண்டுமும்பைக் குதிரைகளையும் கவர்ச்சி ஹோதாவில் இறக்கியுள்ளனர். இருவருக்கும் கிளாமர், கிளாமர், கிளாமர்மட்டுமே என தெள்ளத் தெளிவாக சொல்லியே புக் பண்ணியுள்ளனராம்.

அவர்களும் பின்னிடுவோம் பின்னி என நெஞ்சை நிமிர்த்தி தெம்பாக சொல்லி இயக்குநருக்கும்,தயாரிப்பாளருக்கும் பூஸ்ட் கொடுத்துள்ளராம். இவர்கள் தவிர முத்துக்காளை, பாலு ஆனந்த், அலெக்ஸ்ஆகியோரும் இருக்கிறார்கள்.

கொத்துப் பாட்டு தேவாதான் இசை. எனவே கண்டிப்பாக குண்டக்க மண்டக்க ரண்டக்க கானா பாட்டு நிச்சயம்இருக்கும். படத்தை இயக்கும் ராஜ் சிற்பி முக்கிய வேடத்திலும் நடிக்கிறாராம். இந்தப் படத்தில் தனது தம்பியைநடிக்க வைப்பதற்காக மோகினி கொஞ்சம் போல பைனான்ஸும் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ரிஷா, சுமா, சுரேகா என முப்பெரும் தேவியருடன் பட்டையைக் கிளப்ப வரும் ஐவர் பட்டாளம், இளைஞர்பட்டாளத்தைக் குறி வைத்து எடுக்கப்படும், காதல் கதையாம்.

விசலடிச்சான் குஞ்சுகளுக்கு ஏற்ற படம்தான்!

Read more about: risha in ivar pattalam

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil