என்ன மேடம் வாய்ப்பு கிடைக்கலையோ.. நக்கலான கேள்விக்கு ரித்திகாவின் காட்டமான பதில்

சென்னை: ரித்திகா சிங் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்தார். காலப்போக்கில் வாய்ப்புகள் குறைய ஒரு பாடலுக்கு நடனம் ஆட ஆரம்பித்திருக்கிறார். அந்த வகையில் கடைசியாக துல்கர் சல்மான் நடித்த கிங் ஆஃப் கொத்தா படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார். இவை தவிர்த்து தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்கள், வீடியோக்கள் பகிர்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். இந்தச் சூழலில் பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு காட்டமாக பதிலடி கொடுத்திருக்கிறார் ரித்திகா.

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் உருவான படம் இறுதிச்சுற்று. கடந்த 2016ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. இதில் ரித்திகா சிங் கதாநாயகியாக நடித்தார். இதுதான் அவரது முதல் படம் ஆகும். அறிமுகமான படத்திலேயே தனது நடிப்பின் மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் ரித்திகா சிங். நிஜத்தில் குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் இறுதிச்சுற்று திரைப்படத்திலும் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்தார்.

Rithika Singh Given Thug Reply To Journalist at Latest Press Meet

தேசிய விருது: இதனால் அந்தக் கதாபாத்திரமாக மாறுவது அவருக்கு வெகு இயல்பாகவே அமைந்துவிட்டது. குத்துச்சண்டை வீராங்கனையாக மட்டுமின்றி பாடல்களில் நடனமும் சிறப்பாக ஆடினார். இதனால் கோலிவுட்டில் மிகச்சிறந்த எதிர்காலம் ரித்திகாவுக்கு இருப்பதாக பலர் கூறினர். மேலும், இறுதிச்சுற்று படத்தில் நடித்ததற்காக முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார்.

கொலை: சினிமாவில் கண்டிப்பாக பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதற்கேற்ப அவருக்கான பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. கடைசியாக அவரது நடிப்பில் கொலை திரைப்படம் வெளியானது. அந்தப் படமும் சொல்லிக்கொள்ளும்படி பெரிய வெற்றி பெறவில்லை. இதனையடுத்து கிங் ஆஃப் கொத்தா படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடினார். அது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

வேட்டையன்: இனி கவர்ச்சி நடனத்திற்கு மட்டுமே அவர் அழைக்கப்படுவார் என்று பலரும் நினைத்திருந்த சூழலில் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் அவர் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் தனக்கு பெரிய திருப்புமுனை கிடைக்கும் என்ற பெரிய நம்பிக்கையில் இருக்கிறார். வேட்டையன் படத்தில் நடித்தபோது அவர் விபத்து ஒன்றை சந்தித்து காயமடைந்தது நினைவுகூரத்தக்கது.

ஒர்க் அவுட் ஃபோட்டோ, வீடியோ: இப்படி சினிமாவில் தொடர்ந்து நடித்துவரும் அவர் தான் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதும் வாடிக்கையாக இருக்கிறது. சமயங்களில் அந்த புகைப்படங்களும், வீடியோக்களும் ஓவர் டோஸ் கவர்ச்சியாகவும் மாறிவிடுவதுண்டு. இந்தச் சூழலில் ரித்திகா சிங்கிடம் பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு காட்டமாக பதிலளித்திருக்கிறார்.

ரித்திகாவின் பதிலடி: சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவரிடம் ஒருவர், தெலுங்கில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியிருக்கிறீர்கள். ஹீரோயினாக வாய்ப்பு கிடைக்கவில்லையா என்று கேள்வியை முன்வைத்தார். இதனால் முகம் சிவந்த ரித்திகா, "எனது மனதுக்கு பிடித்திருந்தால் மட்டுமே நடிப்பேன். எந்தச் சூழ்நிலையிலும் வேண்டாத படத்தில் நடிக்கமாட்டேன். மலையாளம், ஹிந்தி, மராத்தி என எதுவாக இருந்தால் கதை பிடித்திருக்க வேண்டும். முக்கியமாக எனது ரோல் சரியாக இருக்க வேண்டும். அப்போதுதான் ஓகே சொல்வேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X