என்ன இப்படி இறங்கிட்டாங்க.. கவர்ச்சியில் கிறங்கடிக்கும் ரித்திகா சிங்.. ட்ரெண்டாகும் புகைப்படங்கள்
சென்னை: ரித்திகா சிங் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்தார். காலப்போக்கில் வாய்ப்புகள் குறைய ஒரு பாடலுக்கு நடனம் ஆட ஆரம்பித்திருக்கிறார். அந்த வகையில் கடைசியாக துல்கர் சல்மான் நடித்த கிங் ஆஃப் கொத்தா படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார். இவை தவிர்த்து தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்கள், வீடியோக்கள் பகிர்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். இந்தச் சூழலில் அவர் கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் உருவான படம் இறுதிச்சுற்று. கடந்த 2016ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. இதில் ரித்திகா சிங் கதாநாயகியாக நடித்தார். இதுதான் அவரது முதல் படம் ஆகும். அறிமுகமான படத்திலேயே தனது நடிப்பின் மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் ரித்திகா சிங். நிஜத்தில் குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் இறுதிச்சுற்று திரைப்படத்திலும் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்தார்.

தேசிய விருது: இதனால் அந்த கதாபாத்திரமாக மாறுவது அவருக்கு வெகு இயல்பாகவே அமைந்துவிட்டது. குத்துச்சண்டை வீராங்கனையாக மட்டுமின்றி பாடல்களில் நடனமும் சிறப்பாக ஆடினார். இதனால் கோலிவுட்டில் மிகச்சிறந்த எதிர்காலம் ரித்திகாவுக்கு இருப்பதாக பலர் கூறினர். மேலும், இறுதிச்சுற்று படத்தில் நடித்ததற்காக முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார்.
கொலை: சினிமாவில் கண்டிப்பாக பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதற்கேற்ப அவருக்கான பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. கடைசியாக அவரது நடிப்பில் கொலை திரைப்படம் வெளியானது. அந்தப் படமும் சொல்லிக்கொள்ளும்படி பெரிய வெற்றி பெறவில்லை. இதனையடுத்து கிங் ஆஃப் கொத்தா படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடினார். அது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

வேட்டையன்: இனி கவர்ச்சி நடனத்திற்கு மட்டுமே அவர் அழைக்கப்படுவார் என்று பலரும் நினைத்திருந்த சூழலில் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் அவர் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் தனக்கு பெரிய திருப்புமுனை கிடைக்கும் என்ற பெரிய நம்பிக்கையில் இருக்கிறார். வேட்டையன் படத்தில் நடித்தபோது அவர் விபத்து ஒன்றை சந்தித்து காயமடைந்தது நினைவுகூரத்தக்கது.
ஒர்க் அவுட் ஃபோட்டோ, வீடியோ: சமீபத்தில்கூட ரஜினிகாந்த்தை சந்தித்த புகைப்படங்களை அவர் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். இப்படி சினிமாவில் தொடர்ந்து நடித்துவரும் அவர் தான் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதும் வாடிக்கையாக இருக்கிறது. சமயங்களில் அந்த புகைப்படங்களும், வீடியோக்களும் ஓவர் டோஸ் கவர்ச்சியாகவும் மாறிவிடுவதுண்டு. அது சமூக வலைதளங்களில் படு ட்ரெண்டாகி டாக் ஆஃப் தி இண்டர்நெட்டாகவும் இருக்கும்.
புதிய புகைப்படங்கள்: இந்நிலையில் ரித்திகா சிங் தனது புதிய புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக வைத்திருக்கிறார். கறுப்பு கலர் உடையில் தனது கூந்தலை முன் பக்கமாக வைத்து அவர் கொடுத்திருக்கும் போஸை பார்த்து ரசிகர்கள் கிறங்கி போயிருக்கின்றனர். மேலும் அழகு அள்ளுதே என்று கமெண்ட்ஸ் செய்து அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கவும் செய்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











