சாதி ஒழிப்பை நாடும் பா. ரஞ்சித் படத்தில் சாதி வெறியர்களை விளாசிய ரித்விகா
Recommended Video

சென்னை: பா. ரஞ்சித் தயாரிக்கும் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படத்தில் ரித்விகா நடிக்கிறார்.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. மகத், யாஷிகா ஆகியோர் ஜோடி சேர்ந்து நடிக்கிறார்கள். ஐஸ்வர்யா தத்தாவும் பிசியாகிவிட்டார்.
இந்நிலையில் பிக் பாஸ் 2 டைட்டிலை வென்ற ரித்விகாவுக்கு பட வாய்ப்பு கிடைத்துள்ளது.
ரித்விகா
பா. ரஞ்சித் தயாரிப்பில் தினேஷ் ஹீரோவாக நடிக்கும் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படத்தில் ரித்விகா நடிக்கிறார். இந்த படத்தில் அனேகா, ரித்விகா என்று இரண்டு ஹீரோயின்கள். அதியன் ஆதிரை இயக்கத்தில் நான் நடிப்பது குறித்து ரித்விகா ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சாதி ஒழிப்பு
சாதி ஒழிப்பு தான் என் கனவு என்று கூறி வரும் பா. ரஞ்சித்தின் படத்தில் நடிக்கிறார் ரித்விகா. அண்மையில் தன் சாதியை கூகுளில் தேடியவர்களுக்கு லெப்ட் அன்ட் ரைட் விட்டார் ரித்விகா என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஸ்வர்யா
பிக் பாஸ் 2 வீட்டில் என்ன தான் சண்டை போட்டிருந்தாலும் ரித்விகாவுக்கு கிடைத்துள்ள பட வாய்ப்பு குறித்து அறிந்து ஐஸ்வர்யா தத்தா அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விஜயலட்சுமி
ரித்விகா ரஞ்சித் படத்தில் நடிக்க உள்ளதை அறிந்து பிக் பாஸ் பிரபலங்கள் மகத், விஜயலட்சுமி உள்ளிட்டோர் அவரை வாழ்த்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











