»   »  ரித்திகா சிப்பருக்கு சவால்னா.. 'சால்னா' சாப்பிடுவது மாதிரியாம்...!

ரித்திகா சிப்பருக்கு சவால்னா.. 'சால்னா' சாப்பிடுவது மாதிரியாம்...!

By Sudha
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட்டில் புதிதாக ஒரு கவர்ச்சிப் பறவை வந்து தரையிறங்கியுள்ளது.

ஏற்கனவே இருக்கிற அழகிகளின் ஒருங்கிணைந்த குவியலாக இவர் காணப்படுகிறார். இந்த அழகியின் பெயர் ரித்திகா சிப்பர்.

முற்றிலும் மசாலா, கவர்ச்சி, அதிரடியான படங்களில் நடிக்கவே தனக்கு விருப்பம்.. சவால்னா எனக்கு சால்னா மாதிரி என்று படு தெம்பாகப் பேசுகிறார்.

ஐஸ்வர்யாவின் கண்கள்..தீபிகாவின் கால்கள்

ஐஸ்வர்யாவின் கண்கள்..தீபிகாவின் கால்கள்

ஐஸ்வர்யா ராயின் கண்களைப் பார்த்திருக்கிறது பாலவுட். பிபாஷாவின் கவர்ச்சி உடலையும் பார்த்திருக்கிறது. கூடவே தீபிகா படுகோனின் அழகிய கால்களையும் பார்த்து ரசித்திருக்கிறது.. ஆனால் இவற்றை மொத்தமாக ஒரே ஆளிடம் பார்த்திருக்கிறதா என்றால்... இல்லைதான் என்று பதில் வரும்.

வந்தார் சிப்பர்

வந்தார் சிப்பர்

ஆனால் இந்தக் குறையத் தீர்க்க வந்திறங்கியுள்ளார் ரித்திகா சிப்பர். மேற்சொன்ன அத்தனை பேரின் அழகியல் அம்சங்களையும் ஒட்டுக்காக தன்னிடம் வைத்திருக்கிறாராம் ரித்திகா.

துபாயிலிருந்துதான்

துபாயிலிருந்துதான்

இவர் துபாயிலிருந்து மும்பைக்கு வந்துள்ளார். கில்லர் லுக்.. பிளாம்பாயன்ட் பாடி என்று அதிர வைக்கிறார் ரித்திகா.

பார்த்தால் பெனிலோப்.. கிட்டப் போனால் மீனாகுமாரி

பார்த்தால் பெனிலோப்.. கிட்டப் போனால் மீனாகுமாரி

கொஞ்சம் தள்ளி நின்று பார்த்தால் ஹாலிவுட்டின் பெனிலோப் குரூஸ் மாதிரி இருக்கிறாராம் இவர். சற்று உற்றுப் பார்த்தால் மும்பையின் மீனா குமாரி சாயல் தெரியுமாம்.. இவரே சொல்கிறார்.

கிளாமர்.. செக்ஸி...

கிளாமர்.. செக்ஸி...

கவர்ச்சியாகவும், செக்ஸியாகவும், க்யூட்டாகவும் தான் இருப்பதாகவும் பெருமையுடன் மார் தட்டிச் சொல்கிறார் ரித்திகா.

பாலிவுட்டை ஆள வேண்டும்

பாலிவுட்டை ஆள வேண்டும்

தனது வருகை குறித்து ரித்திகா கூறுகையில், பாலிவுட்டை ஆள நான் விரும்புகிறேன். எனது உடல் அமைப்பு எந்த மாதிரியான கேரக்டருக்கும் பொருந்தக் கூடியது.. இங்கு ஏற்கனவே உலா வந்து கொண்டுள்ள நாயகிகளுக்குச் சொல்லிக் கொள்கிறேன்.. ரித்திகா வந்து விட்டாள் உங்களுக்குப் போட்டியாக.. என்று முழங்குகிறார்.

சவால்னா.. சால்னா மாதிரி

சவால்னா.. சால்னா மாதிரி

இவருக்கு சவால் என்றால் சக்கரைப் பொங்கல் போலவாம். சவால்களைச் சந்தித்து வெல்வது தனக்குப் பிடித்தமானது என்று கூறும் ரித்திகா, கவர்ச்சி, செக்ஸி, திரில்லர், மசாலாப் படங்களும், அதிரடிப் படங்களுமே தனது சாய்ஸ் என்கிறார்.

ஆத்தாடி.. இப்பவே பயந்து வருதே...

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Bollywood had seen Aishwarya Rai Bachchan’s eyes, Bipasha’s body and Deepika Padokone long legs which have ruled over millions of hearts. And now here comes the Dhamaka of Dubai Ritika Chibber she has all of their qualities in one. She has the killer looks and flamboyant body to beat all the actresses of Bollywood. She had that poise, stance, height, and the perfect body, the skin tone she looked exactly like a Hollywood Penelope Cruz or Indian beauty like Meena Kumari.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more