புடவை கட்டுன புயலா மாறிய ரித்திகா சிங்.. வேட்டையன் ஹீரோயின் கையில என்ன பாருங்க!
சென்னை: இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் ரித்திகா சிங். அவர் நடித்து வெளியான இறுதிச்சுற்று படத்துக்கு பல ஆண்டுகள் கழித்து தற்போது தான் சிறப்பு பரிசை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வேட்டையன் படத்தில் நடித்து வரும் ரித்திகா சிங் சிலம்பம் எடுத்து சுற்றும் காட்சிகளை தற்போது வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று படத்தில் தன்னுடைய தனித்துவமான நடிப்பை ரித்திகா சிங் வெளிப்படுத்தி கோலிவுட்டுக்கு புதிய வரவாக மாறினார்.

கடந்த ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கிங் ஆஃப் கோதா படத்தின் "கலாட்டாக்காரன்" பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
இறுதிச்சுற்றுக்கு விருது: MMA என அழைக்கப்படும் மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் வீராங்கனையாக சுற்றிக் கொண்டிருந்த ரித்திகா சிங்கை சுதா கொங்கரா தனது இறுதிச்சுற்று படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகப்படுத்தினார். ஏய் சண்டைக்கார பாடல் சந்தோஷ் நாராயணன் இசையில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், ரித்திகா சிங்குக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. இறுதிச்சுற்று திரைப்படம் சாலா கதூஸ் என இந்தியிலும், குரு என்கிற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டும் வெளியானது.
ஓ மை கடவுளே மாஸ் ஹிட்: காக்கா முட்டை இயக்கத்தில் விஜய்சேதுபதி உடன் இணைந்து ரித்திகா சிங் நடித்த ஆண்டவன் கட்டளை திரைப்படமும் பாராட்டுக்களை பெற்றது. அசோக் செல்வன், விஜய்சேதுபதி, வாணி போஜன் நடித்த ஓ மை கடவுளே படம் மீண்டும் ரித்திகா சிங்குக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. ஆனால், அந்த படத்திற்கு பிறகு அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை. கடைசியாக வந்த கொலை திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.

வேட்டையன் படத்தில்: ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் ஃபாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வேட்டையன் படம் உருவாகி வருகிறது. இந்நிலையில், சிலம்பம் சுற்றும் பயிற்சியை கற்று வரும் ரித்திகா சிங் அதன் புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
வளரி படத்துக்காக: நடிகை ரித்திகா சிங் வேட்டையன் படத்துக்காக சிலம்பம் சுற்றுகிறாரா என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அடுத்து அவர் நடித்து வரும் வளரி படத்துக்காகத் தான் சிலம்பம் உள்ளிட்ட கலைகளை அவர் பயின்று போர் வீராங்கனையாக நடித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
சேலையில் சிலம்பம்: சேலை கட்டிக் கொண்டு சிலம்பம் பயிற்சியை மேற்கொள்ளும் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் வரவேற்பை அதிகளவில் பெற்றுள்ளார் ரித்திகா சிங். அரை டவுசர் அணிந்துக் கொண்டு கவர்ச்சி குயினாக வலம் வந்த ரித்திகா சிங் போர் வீராங்கனையாக மாறி எதிரிகளை புரட்டி எடுக்க காத்திருக்கிறார். தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து தனக்கு பிடித்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் ரித்திகா சிங்.
4 மில்லியன் ஃபாலோயர்ஸ்: சில படங்களிலேயே நடித்திருந்தாலும் மிகப்பெரிய கவன ஈர்ப்பை பெற்றுள்ள ரித்திகா சிங் இன்ஸ்டாகிராமில் 4.4 மில்லியன் ரசிகர்களை ஃபாலோயர்களாக பெற்றுள்ளார். அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக்குகள் மற்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











