இருக்க இருக்க கவர்ச்சி கூடிக்கிட்டே போகுதே.. வொர்க் அவுட் புகைப்படத்தை வெளியிட்ட ரித்திகா சிங்!

மும்பை : நடிகை ரித்திகா சிங் இறுதிச்சுற்று படம் மூலம் தமிழில் என்ட்ரியாகி ரசிகர்களை கவர்ந்தவர். 2016ல் வெளியான இந்தப் படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்திருந்தார்.

தொடர்ந்து தமிழில் சில படங்களில் நடித்த ரித்திகா தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் இவர் ஆக்டிவாக காணப்படுகிறார். தற்போது தன்னுடைய உடல் எடையை சற்றே ஏற்றி சிறப்பாக காணப்படுகிறார்.

நடிகை ரித்திகா

நடிகை ரித்திகா

நடிகை ரித்திகா சிங் தமிழில் இறுதிச்சுற்று என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். கடந்த 2016ல் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். நிஜத்திலும் இவர் குத்துச்சண்டை வீராங்கனைதான்.

சிறப்பான இறுதிச்சுற்று படம்

சிறப்பான இறுதிச்சுற்று படம்

இந்தப் படத்தில் கோச்சாக மாதவன் நடித்திருந்த நிலையில், இவர்கள் இருவரின் நடிப்பு மற்றும் கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்தது. படமும் வெற்றிப்படமாக மாறிய நிலையில், தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்த படங்களில் ரித்திகா நடித்து ரசிகர்களை கவர்ந்தார். விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை மற்றும் ராகவா லாரன்சுடன் சிவலிங்கா உள்ளிட்ட படங்களில் இவர் நடித்திருந்தார்.

ஓ மை கடவுளே படம்

ஓ மை கடவுளே படம்

முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தும் இந்தப் படங்கள் இவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கவில்லை. இதையடுத்து கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியான ஓ மை கடவுளே படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்து நடித்திருந்தார். இந்தப் படம் வசூல்ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் சிறப்பாக அமைந்தது.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

தற்போது ரித்திகா அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இவரது கை வசம் மூன்று படங்கள் உள்ளன. பாக்ஸர், வணங்காமுடி, மற்றும் பிச்சைக்காரன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கைப்பற்றும் வகையில் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் ரித்திகா.

கவர்ச்சிப் புகைப்படங்கள்

கவர்ச்சிப் புகைப்படங்கள்

அடுத்தடுத்த கவர்ச்சிப் படங்களை தன்னுடைய சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை மட்டுமில்லாமல் திரையுலகினரையும் கவர்ந்து வருகிறார். முதல் படத்தில் போல இல்லாமல், சற்றே குண்டாகி கும்மென்றாகியுள்ளார் ரித்திகா. இந்நிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள வொர்க் அவுட்டிற்கு பிந்தைய புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X