Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தென்னிந்திய சினிமாவை கலக்கும் நடிகை ரிது வர்மா... அட அவரா இவர் ?
சென்னை : தென்னிந்திய சினிமாவில் நடிப்பில் சிறந்த நடிகைகளில் ஒருவராக விளங்க கூடியவர் நடிகை ரிது வர்மா. அல்ட்ரா மாடர்ன் வேடங்களிலும், பக்கத்து வீட்டுப் பெண் போன்ற வேடங்களிலும் பொருந்தக்கூடிய அரிதானவர்களில் இவரும் ஒருவர்.
தெலுங்கில் 'பெல்லி சூப்புலு' படத்தின் மூலம் கவனத்தைத் திருடியதில் இருந்து 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் மூலம் தமிழ் மக்களைக் கவர்ந்தது வரை, ரிது வர்மா ஒரு சிறந்த நடிகையாக தனது திறனை நிரூபித்துள்ளார். தற்போது, அவர் அடுத்தடுத்து மிக சுவராஸ்யமான பல படங்களில் நடித்து வருகிறார், அவை தயாரிப்பின் பல்வேறு கட்டங்களில் உள்ளன.
தமிழில் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமான ரிது வர்மா, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், புத்தம் புது காலை ஆகிய படங்களில் நடித்துள்ளார். துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்து வருகிறார். சிறந்த நடிகைக்காக நந்தி விருது, ஃபிலிம்ஃபேர் விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார் ரிது வர்மா.
தற்போது, நடிகை ரிது வர்மா, விஷால்-எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் மார்க் ஆண்டனி படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்திற்காக அடுத்த மாதம் தனது பகுதிகளுக்கான படப்பிடிப்பைத் தொடங்குகிறார். அவர் ஓகே ஓக ஜீவிதம் (தெலுங்கு)- கானம் (தமிழ்) என்ற இருமொழித் திரைப்படத்திலும் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது, மேலும் இப்படம் விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
யாரு பார்த்த வேலையா இருக்கும்.. விவாகரத்து நடிகரின் ரெக்கார்டு எல்லாம் இப்படி வீணாப் போச்சே!
மேலும் இவர் அசோக் செல்வனின் நித்தம் ஒரு வானம் (தெலுங்கில் ஆகாசம்) படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ரிது வர்மா தென்னிந்திய திரைத்துறையின் பல மொழிகளிலும் பணிபுரிவதால் மிக பிஸியான நடிகையாக மாறியுள்ளார். விரைவில் மலையாள திரையுலகிலும் அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.