கருப்பு சேலையில் லைக்குகளை அள்ளும் ரிது வர்மா... ட்ரெண்டாகும் புகைப்படம் !

சென்னை: ஹீரோக்கள் மட்டுமே ரசிகர்களை கதிகலங்க வைத்த நிலையில் சமீபத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வந்த நடிகை ரிது வர்மா அனைவரையும் மிரட்டியிருப்பார்.

தெலுங்கில் தொடர்ந்து நடித்து வந்த இவர் இப்போது தமிழ் திரைப்படங்களிலும் உலா வரும் நிலையில் விக்ரமின் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவ்வாறு தமிழ் ரசிகர்களை நடித்த முதல் திரைப்படத்திலேயே ஆட்டிப்படைத்த ரிது வர்மா இப்பொழுது கருப்பு நிற சேலையில் கண்களுக்கு குளிர்ச்சியாக க ளை கட்டும் புகைப்படங்களை வெளியிட்டு ட்ரெண்ட்டாகி வருகிறார்.

மிகப்பெரிய தாக்கத்தை

மிகப்பெரிய தாக்கத்தை

தெலுங்கு சினிமாவில் சமீப காலமாக வித்தியாசமான கதைகள் கொண்டு திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் அர்ஜுன் ரெட்டி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த அந்த திரைப்படம் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

சிறந்த நடிகை

சிறந்த நடிகை

அர்ஜுன் ரெட்டி திரைப்படத்திற்கு முன் தெலுங்கு திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களும் இரண்டாம் கதாநாயகனாகவும் நடித்து வந்து விஜய் தேவரகொண்டா முழு கதாநாயகன் அந்தஸ்தை பெற்றுத்தந்த பெல்லி சூபுளு திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ரிது வர்மா நடித்து சிறந்த நடிகைக்காக அந்த ஆண்டு பல விருதுகளையும் தட்டிச் சென்றார்.

மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை

மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை

இவ்வாறு தெலுங்கில் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்து, அங்கு சிறந்த நடிகை என பெயர் எடுத்த நடிகை ரிது வர்மா தமிழுக்கு வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், சமீபத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை பெற்று தந்து பலருக்கும் அறிமுகப்படுத்தியது.

மிரட்டிய ரிது

மிரட்டிய ரிது

அனைத்து வகையிலும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மிகச்சிறந்த திரைப்படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நிலையில் அதில் ஹீரோவை மிஞ்சிய கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டிய ரிது வர்மாவை ரசிகர்கள் பெரிதும் கொண்டாடி வரும் நிலையில், இப்பொழுது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் திரைப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

கருப்பு நிற சேலையில்

கருப்பு நிற சேலையில்

தெலுங்கைப் போலவே தமிழிலும் ரிது வர்மா பல திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில் இப்பொழுது கருப்பு நிற சேலையில் பளபளவென பளிங்கு போல மின்னும் தேகத்தில் கண்ணுக்கு குளிர்ச்சியான களை கட்டும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள ரிது வர்மாவை ரசிகர்கள் வளச்சி வளச்சி வர்ணித்து வரும் நிலையில், இந்த சுடச்சுட புகைப்படங்கள் இப்பொழுது இணையத்தளத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X