இனி பயமே இல்ல… கொரோனா 2வது தடுப்பூசியும் போட்டாச்சு… ரிது வர்மா ஹேப்பி !

சென்னை : கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட நடிகை ரிது வர்மா கொரோனா இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான பேராயுதமாக இருப்பது தடுப்பூசிகள் தான்.

அந்த வகையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.

தடுப்பூசி

தடுப்பூசி

இந்தியாவில் நூறு பேரில் 20 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். ஒரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் விகிதம் 16 சதவீதமாகவும், இரண்டு தவணையையும் செலுத்திக் கொண்டவர்களின் விகிதம் 3.6 சதவீதமாகவும் உள்ளது.

28 கோடியை கடந்தது

28 கோடியை கடந்தது

நாட்டில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை நேற்று 28 கோடியை கடந்தது. இன்று காலை 7 மணி வரை கிடைத்த தகவல்படி, 38,24,408 அமர்வுகள் மூலம் மொத்தம் 28,00,36,898 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 30,39,996 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

2வது டோஸ் தடுப்பூசி

2வது டோஸ் தடுப்பூசி

அந்த வகையில் அனைத்து தரப்பு மக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமான ரிது வர்மா கொரோனா இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

விக்ரமுடன்

விக்ரமுடன்

இவர் தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.மேலும், நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருக்கும் விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்துள்ளார். அதேபோல, அறிமுக வீரர் ஸ்ரீ கார்த்திக் இயக்கிய ஷர்வானந்தின் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X