'வேற லெவல் கண்கள்..என்னமோ சொல்லுதே..' பிரபல ஹீரோயினை பொயட்டிக்காக வர்ணிக்கும் ஃபேன்ஸ்!

By

சென்னை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள புதிய புகைப்படத்தை ரசிகர்கள்

லாக்டவுன் காரணமாக வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருக்கிறார்கள் நடிகர், நடிகைகள்.

தினமும் ஏதாவது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிடுவது அவர்களின் லேட்டஸ்ட் வழக்கம்.

பொழுதுபோக்கு

பொழுதுபோக்கு

இந்த தனிமை காலகட்டத்தில் இது அவர்கள் பொழுதுபோக்கு. இதுவும் இல்லை என்றால் டிவி சேனல்களை மட்டும் பார்த்துக்கொண்டு நேரத்தைக் கழிப்பது கஷ்டமாகி இருக்கும். அந்த வகையில் சோசியல் மீடியா, சொல்ல முடியாத சுவாரஸ்யம். சமூக வலைத்தளப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ரியா சென்னும் ஒருவர். அடிக்கடி ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார்.

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

தனக்காக சிறப்பு ஆப் ஒன்றை உருவாக்கி இருக்கிறார், ரியா. அது பெய்ட் ஆப். பணம் கட்டினால், ரியாவின் ஹாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பேட்டிகளை பார்க்கலாம். அதில் செல்ல முடியாதவர்களுக்காக, இன்ஸ்டாவில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி, பரபரப்பாக இருந்தது.

முத்தக் காட்சி

முத்தக் காட்சி

அதில், 'நான் குட்டை பாவாடை அணிந்தால், அதை பெரிய விஷயமாக்குவார்கள். சினிமா படங்களில் முத்தக்காட்சியில் நடித்தால், அதை போல்டான காட்சி, செம கிளாமர் என்று வர்ணிப்பார்கள். இதையே, சில முன்னணி ஹீரோயின்கள் செய்தால் அதைக் கண்டுகொள்ள மாட்டார்கள். எனக்கு மட்டும் ஏனிந்த இந்த கிளாமர், போல்ட் இமேஜ்? என்னை மட்டும் குறி வைத்து தாக்குகிறார்கள் என்று கூறியிருந்தார்.

கண்ணு இருக்கே

கண்ணு இருக்கே

இந்நிலையில், இப்போது தனது இன்ஸ்டாவில் புதிய கிளாமர் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை கண்டபடி தெரிவித்துள்ளனர். ஒருவர், உங்க கண்ணு இருக்கே, வேற லெவல்ங்க.. என்னமோ பண்ணுது என்று ஏக்கமாகக் கூறியிருக்கிறார். பலர், ஐ லவ் யூ என்ற வார்த்தையை எழுதி ஓவராக வழிந்துள்ளனர். சிலர் அவர் அழகை வர்ணித்து கவிதை மொழி பேசியுள்ளனர்.

அப்ப பார்த்த மாதிரியே

அப்ப பார்த்த மாதிரியே

என்னவொரு அப்பாவித்தன லுக்.. அது நிறைய பேசுது, போங்க என்று ஒருவர் கூறியுள்ளார். அதெப்படி, 15 வருஷத்துக்கு முன்னால பார்த்த மாதிரியே இப்பவும் இருக்கீங்க? என்று ஆச்சரியமாகக் கேட்டுள்ளனர், சிலர். உங்க அழகை எப்படி வர்ணிக்கன்னு தெரியலை.. அடுத்து என்ன படத்துல நடிக்கிறீங்க? என்று ஒருவர் கேட்டுள்ளார். ரியா சென்னின் இந்தப் போட்டோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மூன் மூன் சென்

மூன் மூன் சென்

நடிகை ரியா சென், தமிழில் தாஜ்மஹால் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். பிரபல இந்தி மற்றும் பெங்காலி நடிகை மூன் மூன் சென்னின் மகள். இந்தப் படத்துக்குப் பிறகு அர்ஜுனின் அரசாட்சி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். இந்தியில் சில் சிலாய், ஹேய் பேபி, லவ் கிச்சடி, பேயிங் கெஸ்ட்ஸ், ஜிந்தகி 50-50 உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது வெப்சீரிஸ்களில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X