அட்வைஸ்லாம் சரி, மாஸ்க் எங்க? கொரோனாவை சாதாரணமா நினைக்காதீங்க? கிளாமர் ஹீரோயினை கலாய்க்கும் ஃபேன்ஸ்!

By

சென்னை: நடிகை ரியா சென் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Recommended Video

CELEBRITY BITES ON CORONA | ACTRESS LATHA RAO | FILMIBEAT TAMIL

தமிழில் தாஜ்மஹால் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரியா சென். பிறகு அர்ஜூன் நடித்த அரசாட்சி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார்.

தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் வரவில்லை. இந்தியில் கவனம் செலுத்தினர். அங்கு சில் சிலாய், ஹேய் பேபி, லவ் கிச்சடி, பேயிங் கெஸ்ட்ஸ், ஜிந்தகி 50-50 உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

ஜோதிகா அம்மா

ஜோதிகா அம்மா

இவர் பிரபல இந்தி நடிகை மூன் மூன் சென்-னின் இளைய மகள். மூன் மூன் சென், தமிழில் 12 பி படத்தில் ஜோதிகாவுக்கு அம்மாவாக நடித்திருந்தார். ரியா சென்னும் அவரது சகோதரி ரைமா சென்னும் அவ்வப்போது ஹாட் போட்டோஷூட் நடத்தி அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பரபரப்பைக் கிளப்புவார்கள். இந்தப் புகைப்படங்களை ரசிக்கத் தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.

கிளாமர் போட்டோ

கிளாமர் போட்டோ

இந்நிலையில் நடிகை ரியாசென் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை ஏராளமானோர் லைக் செய்துள்ளனர். செம கிளாமராக இருக்கும் இந்தப் புகைப்படத்துக்கு, ரசிகர்கள் கண்டபடி கமென்ட் அடித்து வருகின்றனர். கொரோனாவால் வீட்டில் இருந்தது பற்றி, நீண்ட கேப்ஷன் ஒன்றையும் பதிவிட்டுள்ளார், நடிகை ரியா சென்.

காற்றின் தரம்

காற்றின் தரம்

அதில், நாம் வீட்டிலேயே தங்கியிருந்தோம். குடும்பத்தினரோடு இணைந்தோம். கடைசியாக இயற்கை அன்னைக்கு சுவாசிக்க வாய்ப்பு கொடுத்தோம். நாடு முழுவதும் காற்றின் தரம் மேம்பட்டிருக்கிறது. பறவைகள் மீண்டும் ஒரு முறை வானம் நோக்கி பறந்தன. முன்பை விட தண்ணீர் சுத்தமாக இருக்கிறது. இது ஒரு கட்டாயத்தின் காரணமாக நடந்தது. ஆனால் கற்பனை செய்து பாருங்கள், நாம் உணர்வுபூர்வமாக தினமும் இப்படியே வாழ்ந்திருந்தால்... என்று கேட்டுள்ளார்.

மேட்ச் ஆகலையே?

மேட்ச் ஆகலையே?

இந்த போட்டோவுக்கு கமென்ட் அடித்துள்ள ரசிகர்கள், கருத்து என்னமோ, நல்லாதான் இருக்கு... ஆனா, உங்க கிளாமர் போட்டோ, இதுக்கு மேட்ச் ஆகலையே? என்று கேட்டுள்ளனர். சிலர். ஒரு ரசிகர், ' எப்பவும் 20 வயது மாதிரியே இருக்கீங்களே...உங்களுக்கு ஏன் வயசே ஆக மாட்டேங்குது?' என்று கேட்டிருக்கிறார். இன்னொருவர், அட்வைஸ்லாம் சரி, மாஸ்க் எங்க? என்றும் வேறொரு ரசிகர், 'கொரோனாவுல ஒவ்வொருத்தன் செத்துக்கிட்டு இருக்கான், இந்த நேரத்துல இப்படியொரு போட்டோ தேவையா?' என்று கேட்டுள்ளார்.

விஷூவலும் கேப்ஷனும்

இன்னும் சிலர், ரியாவின் அழகை செமயாக வர்ணித்துள்ளனர். 'இந்த பூமியில உங்க அழகுக்கு முன்னால ஒருத்தருமே இல்லை' என்றும் விஷூவலும் கேப்ஷனும் ஒட்டவே இல்லையே.. நீங்க அறிமுகமாகும்போது எப்படி இருந்தீங்களோ, இப்பவும் அப்படியே இருக்கீங்க...உங்க அழகு மயக்குது' என்றும் சிலர், 'வீட்டை விட்டு வெளிய போகாதீங்க, கொரோனாவை சாதாரணமா நினைச்சுடாதீங்க?' என்றும் கூறியுள்ளனர்.

மயக்கும் அழகு

மயக்கும் அழகு

'உங்களை படங்கள்ல பார்த்து நாளாச்சே...நீங்க ஏன் திரும்பவும் பாலிவுட்லயோ, வெப்சீரிஸ்லயோ நடிக்கக் கூடாது?' என்று கேட்டுள்ளனர். சிலர் மயக்கும் அழகுன்னு சொல்வாங்களே... அது இதுதான்' என்று தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் அவர் கேப்ஷனை குறிப்பிட்டு, நேத்து இருந்த மாதிரி தொடர்ந்து இருந்தா ஏழைங்கள்லாம் என்ன பண்ணுவாங்க? என்று கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X