»   »  டூ லேட் ரியா சென்

டூ லேட் ரியா சென்

Subscribe to Oneindia Tamil

தனக்குத் தெரியாமல் தனது ஆபாசப் படங்களை தனது பாய் பிரண்டும் இந்திநடிகருமான அஷ்மித் பட்டேல் வெளியிட்டு விட்டதாக பாய்ந்துள்ளார் தாஜ்மஹால்நாயகி ரியா சென்.

பாரதிராஜாவின் மகன் மனோஜ் அறிமுகமான தாஜ்மஹால் படத்தின் நாயகி ரியாசென். தமிழ் அத்து விட்டு விட்டதால், இந்தியில் கிளாமர் புயலைக் கிளப்பிவருகிறார். நடிப்போடு காதலையும் சேர்த்து வளர்த்து வந்தார் ரியா. அவரும் நடிகர்அம்ஷித் பட்டேலும் படு குளோசாக பழகினர்.

இருவரும் படு நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்கள்,செல்போன் மூலமாக வெளியாகி கொஞ்ச நாளைக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தின.அதிலும் ரியா மேல் துணியில்லாமல் இருக்கும் காட்சிகள் அதிர்ச்சியைக் கிளப்பின.

இதையடுத்து ரியாவும், அம்ஷித்தும் காதலை துறந்து விட்டனர். இந்தச் சூழ்நிலையில்அம்ஷித் நடிக்கும் ரோக்டா என்ற படத்தில் ரியாவின் கவர்ச்சிக் காட்சிகள் அடங்கியசில சீன்களை சேர்த்து விட்டுள்ளார் பட்டேல்.

இதனால் கடுப்பாகியுள்ளார் ரியா. அம்ஷித்தை நான் நல்லவர் என்று நம்பி கெட்டுப்போனேன். அதுதான் நான் செய்த மிகப் பெரிய தவறு. ஒவ்வொருவருக்கும் ஒருரகசியம் இருக்கும். அதை அடுத்தவர் தெரிந்து கொள்ள யாருமே விரும்பமாட்டார்கள்.

ஆனால் இதை உடைத்து விட்டார் அம்ஷித். எனது உணர்வுகளோடு விளையாடிவிட்டார். ரோக்டா படத்தில் நான் சம்பந்தப்பட்ட சில கவர்ச்சிக் காட்சிகளை எனதுஅனுமதியில்லாமல் வெளியிட்டுள்ளார் அம்ஷித். அவர் மனிதாபிமானம் உள்ளவரேகிடையாது. அவருடனான அத்தனைத் தொடர்புகளையும் நான் துண்டித்துக் கொண்டுவிட்டேன் என்று புலம்பியிருக்கிறார் ரியா. ஆனால், இது டூ லேட்.

ரோக்டா படத்தில் ரியா படு கவர்ச்சியாக தோன்றும் காட்சிகளை சேர்த்துள்ளனர்.அதில் ஒரு காட்சியில் மேலாடை இல்லாமல் வெறுமனே வருகிறார் ரியா.

Read more about: riya sen slams amsith patel
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil