திருமணம் நின்றது ஏன்? நிச்சயதார்த்த போட்டோவை டெலிட் செய்து ரித்விகா பதில்!

சென்னை: பரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரித்விகா நல்ல கதை அம்சம் கொண்ட கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அண்மையில் இவர் தனது இன்ஸ்டாகிராமில் நிச்சயதார்த்தம் நடந்த போட்டோவை பதிவிட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத் திருமணம் நடைபெறும் என அறிவித்து இருந்தார். அந்த தேதியில் திருமணம் நடைபெறாத நிலையில் தற்போது ரித்விகா திருமணம் நின்றுவிட்டது என வருத்தத்தோடு கூறியுள்ளார்.

நடிகை ரித்விகா, ஒருநாள் கூத்து, கபாலி, இருமுகன், ஓநாய்கள் ஜாக்கிரதை, டார்ச்லைட், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, வால்டர், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என பல படங்களில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதோடு மட்டுமில்லாமல் விஜய் டிவியில் கடந்த 2017ம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து 106 நாட்கள் வீட்டிற்குள் இருந்து டைட்டிலை வென்றார்.

Riythvika Bigg boss Marriage
Photo Credit:

நடிகை ரித்விகா: பரதேசி படத்தில், முக்கியமான வேடத்தில் நடித்து பலரது பாராட்டுக்களையும் பெற்றார் ரித்விகா. பரதேசி கொடுத்த அறிமுகத்தைத் தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவருக்கும் தெரிந்த முகமாக மாறினார். மெட்ராஸ் திரைப்படம் ரித்விகாவுக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத் தந்ததோடு திருப்புமுனை படமாகவும் அமைந்தது. கடந்த ஆண்டு ரித்விகா நவீன் சந்திரா நடித்த 'லெவன்' படத்தில் இரட்டை வேடத்தில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இவர், கதாநாயகியாக ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் குணச்சித்திர வேடங்களில் பல படங்களில் நடித்துள்ளார்.

போட்டோக்கள் டெலிட்: கடந்த ஆண்டு ரித்விகா தனது இன்ஸ்டாகிராமில், நிச்சயதார்த்தம் நடந்த போட்டோவை பதிவிட்டு இருந்தார். தனது நீண்டநாள் நண்பரான வினோத் லட்சுமணன் என்பவருடன் ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெறும் அறிவித்து இருந்தார். அதன் பின் எதிர்ப்பாராத சூழ்நிலைகள் காரணமாக திருமணம் ஒத்திவைக்கப்பட்டதாக நடிகை தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர், உங்களுடைய திருமணத்தில் ஏதாவது பிரச்னையா? என கேட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த நடிகை ரித்விகா, வாழ்க்கையில் எல்லாம் நாம் நினைத்தபடி நடப்பது இல்லை என கூறியுள்ளார். மேலும், ரித்விகா நிச்சயதார்த்த போட்டோவையும் டெலிட் செய்துள்ளார். பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X