நைட் கதவை தட்டுவாங்க.. 29 வயசு பொண்ணு பார்க்க கூடாத எல்லாத்தையும் பார்த்தேன்.. நடிகை பேட்டி!

சென்னை: 29 வயசுல ஒரு பொண்ணு பார்க்க கூடாத எல்லா பிரச்சனையும் நான் பார்த்துவிட்டேன் என்று ஆர்ஜே ஹாசினி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஆர்ஜே வாக ஆரம்பத்தில் தன்னுடைய பயணத்தை தொடங்கி விலாசினி என்கிற ஹாசினி விஜய் டிவியில் ஒளிபரப்பான பாவம் கணேசன் என்ற சீரியலில் அறிமுகமானார்.

RJ and actress Haasini is a emotional interview about married life

இந்த தொடரில் கலக்கப்போவது யாரு நவீன் லீட் ரோலில் நடித்து வரும் நிலையில் ஹாசினி, சித்ரா என்கிற வேடத்தில் நடித்து வந்தார்.

நடிகை ஹாசினி: இந்நிலையில் நடிகை ஹாசினி தனது திருமண வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. திருமண வாழ்க்கையில் நான் ஏமாந்து விட்டேன் என் கணவர் சபரி ஞான பிரகாஷ் எனக்கு மட்டுமில்லாமல் என் குடும்பத்திற்கும் தொல்லை கொடுத்தார்.

மோசமானவர்: திருமணத்திற்கு முன்பு வரை இவர் இவ்வளவு மோசமானவர் என்பது எனக்குத் தெரியாது. திருமணத்திற்கு பிறகு தான் அவரின் பல மோசடி வேலை எனக்கு தெரிய வந்தது. அது மட்டுமில்லாமல் பல பெண்களுடனும் அவருக்கு தொடர்பு இருக்கு. 29 வயசு பொண்ணு பார்க்க கூடாத எல்லாத்தையும் பார்த்துவிட்டேன்.

RJ and actress Haasini is a emotional interview about married life

கதவை தட்டுவார்கள்: நைட் 2 மணிக்கு சிலர் வந்து கதவை தட்டி உங்க கணவருக்கு இந்த மாதிரி பிரச்சனை என்று சொல்வார்கள். சுத்தமா ஒன்னுமே புரியாது என்ன பிரச்சனை என்று பார்ப்பதற்குள் அடுத்த பிரச்சனை வந்து இருக்கும். தினம் தினம் இப்படியே நடந்து நடந்து ஒரு கட்டத்தில் என்ன செய்வது என்றே தெரியவில்லை. கடவுள் கிட்டத்தான் கதறி அழுது இந்த பிரச்சனையில் இருந்து என்னை வேலையில் கொண்டுவா என்று வேண்டினேன்.

பல கஷ்டம்: ஆனால், ஒரு கட்டத்தில் பிரச்சனை நான் இல்லை, என் கணவர் தான் என்பதை புரிந்து கொண்டு அவரைவிட்டு வெளியில் வந்தேன். 2014ம் ஆண்டு ஆரம்பிச்ச பிரச்சனையில் கேட்காத பேச்சு இல்லை, படாத கஷ்டம் இல்லை, பார்க்காத வழக்கறிஞர் இல்ல, இழக்காத நண்பர்கள் இல்லை என தனது வாழ்க்கையில் நடந்த சோகத்தை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வலம் வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X