திரிஷாவை கழட்டி விட்டு அந்த நடிகையை புக் செய்ய திட்டமிட்ட ஆர்ஜே பாலாஜி.. கடைசி நேரத்தில் என்ன ஆச்சு?

சென்னை: ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகிய மிகப் பெரிய வெற்றி படமாக மாறியது. ஆர்ஜே பாலாஜி மற்றும் என்.ஜே. சரவணன் அந்தப் படத்தை இணைந்து இயக்கினர்.

மூக்குத்தி அம்மன் படத்தில் ஆர்ஜே பாலாஜி, நயன்தாரா, ஸ்ம்ருதி வெங்கட், ஊர்வசி மற்றும் மௌலி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடவுளின் தூதுவர் என சொல்லிக் கொண்டு ஊரை ஏமாற்றும் சாமியாருக்கு எதிராக சாமியே வந்து மக்களை திருத்த ஆர்ஜே பாலாஜி மூலமாக போராட்டம் நடத்துவது போன்ற கதையை படமாக இயக்கி இருந்தனர்.

Trisha Samantha

அமீர்கான் நடித்த பிகே திரைப்படம் போல இந்த படம் இருப்பதாக விமர்சனங்கள் குவிந்தது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், சென்டிமெண்ட் மற்றும் காமெடி காட்சிகளை வைத்து படத்தை வெற்றிப் படமாக ஆர்ஜே பாலாஜி மாற்றினார்.

மாசாணி அம்மன்: ஆர்ஜே பாலாஜி அதன் பின்னர் ஏகப்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்தாலும் அவருக்கு எந்த ஒரு படமும் பெரிதாக கைகொடுக்கவில்லை. ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து ரன் பேபி ரன் படத்தில் நடித்தார். மேலும், இந்த ஆண்டு அவர் நடித்த சிங்கப்பூர் சலூன் திரைப்படம் பெரிதாக ஓடவில்லை. இந்நிலையில் மீண்டும் அம்மன் கதை படமாக்கி வெற்றிப் பெறலாம் என்கிற யுக்தியுடன் மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகமாக மாசாணி அம்மன் என்கிற டைட்டிலில் புதிய படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.

Trisha Samantha

நயன்தாரா இல்லனா திரிஷா: இந்த படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக திரிஷாவை அம்மனாக நடிக்க வைக்கப் போகிறார் ஆர்ஜே பாலாஜி என தகவல்கள் வெளியாகின. திரிஷா அம்மனாக நடித்தாலும் நல்லா இருக்கும் என ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் தற்போது, இன்னொரு பிரபல நடிகையிடம் ஆர்ஜே பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

அம்மனாக சமந்தா?: திடீரென திரிஷா வேண்டாம் என்றும் அவருக்கு பதிலாக அம்மனாக நடிக்கவைக்க சமந்தாவிடம் பேச்சுவார்த்தையை ஆர்ஜே பாலாஜி ஆரம்பித்திருப்பதாக தகவல்கள் தற்போது கோடம்பாக்கத்தில் தீயாக பரவி வருகின்றன. கூடிய விரைவில் மாசாணி அம்மனாக எந்த நடிகை நடிக்கப் போகிறார் என்கிற அறிவிப்பை ஆர்ஜே பாலாஜி வெளியிடுவார் என தெரிகிறது.

மீண்டும் தமிழில் சமந்தா: காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு சமந்தா தமிழ் படங்களில் நடிக்காத நிலையில், மீண்டும் தமிழில் அவர் நடிக்கப் போகிறாரா? என அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பை எகிற விட ஆரம்பித்துள்ளனர். மம்மூட்டிக்கு ஜோடியாக மலையாளத்தில் சமந்தா நடிக்கப் போகிறார் என்றும் சமீபத்தில் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. மேலும், பங்காரம் எனும் படத்திலும் சமந்தா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trisha Samantha

திரிஷா ரொம்ப பிஸி: கோட் படத்தில் சிறப்பு கேமியோவாக திரிஷா நடித்திருப்பதாக கூறப்படுகிறது. அஜித்தின் விடாமுயற்சி, டொவினோ தாமஸின் ஐடென்டிடி, சிரஞ்சீவ்யின் விஷ்வம்பரா என பல படங்களில் திரிஷா பிசியாக உள்ள நிலையில், கால்ஷீட் காரணமாக மாசாணி அம்மன் படத்தை அவர் தவிர்த்து இருக்கவும் வாய்ப்புகள் அதிகம் எனக் கூறுகின்றனர். கூடிய சீக்கிரமே அந்த படம் குறித்த அப்டேட் வெளியாகும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X