twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹைதராபாத்தை உலுக்கிய வீணா மாலிக் 'ராக்கெட்'!

    By Sudha
    |

    ஹைதராபாத்: மக்கள்தான் பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடுவார்களா. பிரபலங்களும் கூட பப்ளிக்காக பட்டாசு வெடித்துப் பட்டையைக் கிளப்புவதும் உண்டு- பப்ளிசிட்டிக்காக.

    கவர்ச்சி 'ராக்கெட்' வீணா

    கவர்ச்சி 'ராக்கெட்' வீணா

    பாலிவுட்டின் லேட்டஸ்ட் கவர்ச்சி ராக்கெட்டான வீணா மாலிக்கும் இதற்கு விதி விலக்கல்ல. அவரும் மக்கள் மத்தியில் இந்த தீபாவளியைக் கொண்டாடியுள்ளார்.

    ராமாராவ் வீட்டில் வைத்து வெடி...

    ராமாராவ் வீட்டில் வைத்து வெடி...

    தெலுங்கு இயக்குநர் ராமாராவின் வீட்டுக்கு வீணா வருகை தர, அந்த ஏரியாவே திரண்டு வந்து விட்டதாம் வீணாவைப் பார்த்து ரசிக்க. ராமாராவின் வீட்டில் தனது தீபாவளியைக் கொண்டாடிய வீணா, அங்கு பட்டாசு வெடித்தும், ராக்கெட் விட்டும் கலக்கினார்.

    'ஜி'யுடன் சேர்ந்து கொண்டாடுவது சந்தோஷம்...

    'ஜி'யுடன் சேர்ந்து கொண்டாடுவது சந்தோஷம்...

    இதுகுறித்து அவர் கூறுகையில் ராமாராவ்ஜியுடன் சேர்ந்து தீபாவளியைக் கொண்டாடியது சந்தோஷமாக இருக்கிறது. தீபம் ஏற்றுவதும், பட்டாசு வெடிப்பதும் ஜாலியாக இருந்தது. ராக்கெட் விட்டதுதான் செம திரில்லாக இருந்தது.

    இது 2வது தீபாவளி

    இது 2வது தீபாவளி

    எனக்கு இது 2வது தீபாவளி. இதை ரசிகர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறேன் என்றார். தீபாவளியை முன்னிட்டு லட்சுமி பூஜையையும் செய்தாராம் வீணா மாலிக்.

    ஏன் ராமாராவ் வீட்டில்?

    ஏன் ராமாராவ் வீட்டில்?

    பாலிவுட்டில் நடித்து வரும் வீணா மாலிக், முதல் முறையாக நக்னா சத்யம் என்ற தெலுங்குப் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குவது ராமாராவ்தான். அதனால்தான் ராமாராவ் வீட்டில் வைத்து தீபாவளியைக் கொண்டாடி அவருக்கு சந்தோஷமளித்தாராம் வீணா.

    புஸ்வாணம் விட்டார்!

    புஸ்வாணம் விட்டார்!

    ராமாராவின் குடும்பத்தினருடன் சேர்ந்து வீணா தீபாவளி கொண்டாடியதை அப்பகுதி மக்கள் பார்த்து ரசித்தனர். வீணா ராக்கெட், கம்பி மத்தாப்பு, புஸ்வாணம் உள்ளிட்டவற்றை கொளுத்தி சின்னப் பெண் போல மகிழ்ந்தார்.

    புதுப் பெண் போல ஜொலிக்கும் ஹைதராபாத்

    புதுப் பெண் போல ஜொலிக்கும் ஹைதராபாத்

    ஹைதராபாத் குறித்து வீணா கூறுகையில், விளக்குகளின் ஒளியில் ஹைதராபாத் அப்படியே புதுப் பெண் போல ஜொலிக்கிறது. இங்குள்ள மக்கள் தங்களது பிசியான நேரத்தை ஒதுக்கி வைத்து விட்டு பண்டிகையாக் கொண்டாடுவது ஆச்சரியமாக இருக்கிறது என்றும் வியப்பை வெளிப்படுத்தினார்.

    English summary
    The festival is not just a favourite with a common man, but is also considered auspicious by the Bollywood Bombshell Veena Malik. On the occasion of diwali she was seen celebrating with her Telugu movie Director Rama Rao residence in Hyderabad. Hot and sexy diva was seen in mood to rock this diwali with “Boom”.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X