»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை ரோஜா 100 திரைப்படங்கள் நடித்து முடித்துள்ளதையடுத்து, சென்னையில்நடந்த பாராட்டு விழாவில் திரையுலகமே திரண்டு வந்து அவரைப் பாராட்டு மழையில்நனைய வைத்தது.

செம்பருத்தி என்ற வெற்றிப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகைரோஜா. அவர் 100 திரைப்படங்களில் நடித்ததை முன்னிட்டு சென்னை தரமணியில்இருக்கும் எம்.ஜி.ஆர். திரைப்பட நகரில் சனிக்கிழமை அவருக்கு பாராட்டு விழாநடந்தது.

விழா துவக்கத்தில் அவரை இயக்குநர் யார் கண்ணனும் நடிகை ஸ்ரீப்ரியாவும்மேடைக்கு வருமாறு அழைத்தனர். ஆனால் அவர் வரவில்லை. ரோஜாவுக்கு ரோஜாஎன்று பெயர் சூட்டிய பாரதிராஜா ரோஜா ரோஜா என அழைத்ததும் பட்டுச் சேலைபளபளக்க மேடையில் தோன்றினார் ரோஜா.

செம்பருத்தி படத்தில் ரோஜாவுடன் கதாநாயகனாக நடித்து நடிகர் பிரசாந்த் ரோஜாவைவாழ்த்தி பேசினார். விழாவுக்கு நடிகர் சரத்குமாருடன் ஜோடியாக வந்திருந்து நடிகைராதிகாவும் ரோஜாவை வாழத்திப் பேசினார்.

இயக்குநர் டி.ராஜேந்தர் கவிதை நடையில் வாழ்த்திப் பேசினார். அவர் பேசுகையில்,ரோஜாவை வாழ்த்த நான் பூக்கள் கொண்டுவரவில்லை. அவை வாடி விடும்.பொன்னாடை கொண்டு வரவில்லை. அது கசங்கிவிடும். என் இதயத்திலிருந்து வரும்பாமாலை வாடாது.

கவர்ச்சியில் லூட்டியும் அடிப்பேன். குணச்சித்திர வேடத்தில் உன்னிடத்தில் என்னைக்கொடுப்பேன் என நிரூபித்தவர் ரோஜா. எந்த சோதனை வந்தாலும் துவண்டுவிடவில்லை ரோஜா என பேசினார்.

இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், ரோஜாவும், செல்வமணியும் நம்மை ரொம்பநாட்களாக ஏமாற்றி வருகிறார்கள். இனி ஏமாற்ற வேண்டாம். பெரியார் பிறந்தமண்ணில் இவர்களை இந்த விழா மூலம் ஒன்று சேர்த்து வைக்கிறேன் என கூறி இருவர்கைகளையும் மஞ்சள் துணி மூலம் இணைத்து கட்டி இணைத்து வைத்தார் பாரதிராஜா.

நிகழ்ச்சியில் திரையுலகைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டு ரோஜாவை வாழ்த்திப்பேசினர். கலை நிகழ்ச்சிகளும், பின்னர் அழகிப் போட்டியும் நடந்தது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil