Don't Miss!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
'செளடேஸ்வரி அம்மனாக' மாறினார் ரோஜா!
பெங்களூர்: தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் வெற்றிகரமான ஹீரோயினாக வலம் வந்த ரோஜா தற்போது அம்மன் வேடத்துக்கு மாறியுள்ளார். கன்னடத்தில் உருவாகியுள்ள ஸ்ரீ செளடேஸ்வரி மஹிமே என்ற படத்தில் அம்மன் வேடத்தில் அவர் நடித்துள்ளார்.
அம்மன் வேடத்திற்கு முன்னோடி கே.ஆர்.விஜயா
எப்படி கிருஷ்ணர் வேடம் என்றால் என்.டி.ராமாராவ் நினைவுக்கு வருவாரோ அதேபோல அம்மன் வேடம் என்றால் நினைவுக்கு வருபவர் கே.ஆர்.விஜயாதான். பல படங்களில் அவர் நடித்த அம்மன் வேடங்கள் புகழ் பெற்றுள்ளன.
அம்மன் படங்களுக்கு கிராக்கி
ஒரு காலத்தில் அம்மன் கதை படங்களுக்கு நலல் கிராக்கி இருந்து வந்தது. அதிலும் கே.ஆர்.விஜயா நடித்த படங்களுக்கு நல்ல கிராக்கி இருந்தது. ஒரே நேரத்தில் பல அம்மன் படங்கள் வந்த காலமும் உண்டு.
ரோஜா - மீனா- ரம்யா கிருஷ்ணன்
கே.ஆர்.விஜயாவின் காலத்திற்குப் பின்னர் புதிய அம்மன் வேட நடிகைகளாக மீனா, ரோஜா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் உருவெடுத்தனர். இவர்களை அம்மனாக நடிக்க வைத்து நிறையப் படங்கள் வெளியாகின.
பொட்டு அம்மன் ரோஜா
ரோஜா, தமிழில் பொட்டுஅம்மன் என்ற படத்தில் அம்மன் வேடத்தில் நடித்து பக்திப் பட ரசிகர்களைக் கவர்ந்தார். ரோஜா நடித்த இன்னொரு அம்மன் படம் திருவக்கரை வக்கிரகாளி அம்மன்.
ராஜகாளியம்மன் ரம்யா கிருஷ்ணன்
அதேபோல ராஜகாளியம்மன் என்ற பக்திப் படத்தில் ரம்யா கிருஷ்ணன் அம்மன் வேடத்தில் நடித்தார். கிராபிக்ஸில் மிரட்டிய படம் இது. ரம்யா கிருஷ்ணன் அம்மன் வேடத்தில் இன்னொரு படம்தான் அம்மன். இப்படமும் விறுவிறுப்பாக ஓடி ஹிட் ஆன அம்மன் படமாகும். படத்தின் நாயகியாக நடித்திருந்தவர் மறைந்த செளந்தர்யா
பாளையத்து அம்மன் மீனா
இதேபோல இன்னொரு முன்னணி நாயகியான மீனாவும் ஒரு அம்மன் படத்தில் நடித்துள்ளார். அப்படத்தின் பெயர் பாளையத்து அம்மன். இந்தப் படத்திலும் கிராபிக்ஸ் வேலைகள் அதிகமாகவே இருந்தன. இப்படமும் பக்திப் பட ரசிகர்களைக் கவர்ந்த படம்தான்.
விஜயசாந்தியின் பண்ணாரி அம்மன்
லேடி சூப்பர்ஸ்டார் என்று ஆந்திர திரையுலகினரால் புகழப்பட்ட விஜயசாந்தியும் கூட அம்மனாக நடித்துள்ளார். அவர் நடித்த படம் பண்ணாரி அம்மன். டி.ராஜேநத்ர்தான் இப்படத்துக்கு இசையமைப்பு. படத்தில் குஷ்புவும் இருந்தார்.
மீண்டும் அம்மனாக மாறிய ரோஜா
இந்த நிலையில் தற்போது கன்னடத்தில் ஸ்ரீசெளடேஸ்வரி மஹிமே என்ற படத்தில் அம்மன் வேடத்தில் நடித்துள்ளார் ரோஜா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்துள்ள அம்மன் வேடப் படம் என்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!