விசைத் தறியில் நெசவு நெய்து வாக்கு சேகரித்த ரோஜா!

By Shankar

நகரி: தான் போட்டியிடும் நகரி தொகுதியில் நெசவாளர்கள் வீடுகளுப்போய் நெசவு நெய்து வாக்கு கேட்டார் நடிகை ரோஜா.

ஆந்திர மாநிலம் சீமாந்திராவில் உள்ள 25 பாராளுமன்றம் மற்றும் 175 சட்ட சபை தொகுதியில் நாளை (7-ந்தேதி) தேர்தல் நடக்கிறது.

Roja completes her campaign at chandrawada

இங்கு நகரி சட்டசபை தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக நடிகை ரோஜா போட்டியிடுகிறார். இங்கு நேற்று மாலையுடன் பிரசாரம் முடிந்தது.

நடிகை ரோஜா இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட ரோஜா, சந்திரவாடாவில் இருந்து ஓம்சக்தி கோவில் வரை பேரணியாக வந்து வாக்கு கேட்டார்.

நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் சந்திரவாடாவில் நடிகை ரோஜா நெசவாளர் வீடுகளுக்குச் சென்றார்.

ஒரு வீட்டுக்குள் நுழைந்தவர், அங்கிருந்த விசைத்தறியில் அமர்ந்து நெய்து பார்த்தார். நெசவாளர்களின் கஷ்டங்களைக் கேட்டறிந்தார்.

தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் ஜெகன் மோகன் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றுவார். எனவே மிகப்பெரிய மெஜாரிட்டியுடன் தன்னை வெற்றி பெறச் செய்து சட்டமன்றத்திற்கு அனுப்புங்கள். உங்களுக்காக நான் போராடுவேன், என்றார்.

ரோஜாவுடன் அவர் கணவர் செல்வமணி, மகள் அன்ஷுமாலிகா மற்றும் உறவினர்கள், கட்சியின் முக்கிய தலைவர்கள் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X