கொளுத்தும் வெயிலில் தேர்தல் பிரச்சாரம்... வெப்பம் தாங்காமல் மயங்கி விழுந்தார் ரோஜா!

By Shankar

நகரி: கொளுத்தும் வெயிலில் தேர்தல் பிரச்சாரம் செய்த நடிகை ரோஜா, வெப்பம் தாங்காமல் மயங்கி விழுந்தார். அவருக்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை அளித்தனர்.

நடிகையும் இயக்குனர் செல்வமணியின் மனைவியுமான ரோஜா, ஆந்திர மாநில நகரி சட்டமன்ற தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் 7-ந்தேதி (புதன்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது.

Roja faints during poll campain

கடந்த 2 மாதங்களாக இந்தத் தொகுதியில் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார் ரோஜா. நகரங்கள் மற்றும் கிராமங்கள் தோறும் வீடுவீடாக சென்று பொதுமக்களிடம் ஆதரவு கேட்டு வருகிறார்.

நகரியை அடுத்த சத்திரவாடாவில் நேற்று மதியம் நடிகை ரோஜா பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் அந்தப்பகுதியில் வீடு வீடாக நடந்து சென்ற அவர், தனது கட்சி சின்னமான 'மின்விசிறி'க்கு ஓட்டளிக்குமாறு வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டார்.

அப்போது ரோஜா திடீரென்று மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை கட்சி தொண்டர்கள், அருகில் உள்ள ஒரு வீட்டுக்குள் தூக்கிச்சென்று படுக்க வைத்து மருத்துவர்களை அழைத்து வந்தனர்.

விரைந்த வந்த டாக்டர்கள் ரோஜா உடல்நிலையைப் பரிசோதித்தனர். வெயில் உஷ்ணம், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சோர்வு காரணமாக மயங்கி விழுந்ததாக தெரிவித்தனர். அங்கேயே அவருக்கு 2 பாட்டில் 'குளுகோஸ்' ஏற்றப்பட்டது.

தொடர்ந்து அவர் 2 மணி நேரம் ஓய்வு எடுத்தார். அதற்குப்பிறகு தெம்படைந்த ரோஜா பிரச்சாரத்துக்குக் கிளம்பினார்.

கட்சி நிர்வாகிகள் கே.ஜே.குமார், சக்கரபாணி செட்டி, அம்முலு ஆகியோர் அவரை ஓய்வு எடுக்குமாறும், பிரசாரத்தை மறுநாள் தொடரலாம் என்றும் ஆலோசனை கூறினர்.

ஆனால் நடிகை ரோஜா அதற்கு மறுப்பு தெரிவித்து, தொடர்ந்து அங்கிருந்து பிரசாரத்தில் ஈடுபட்டார். வீடு வீடாக சென்று 'மின்விசிறி' சின்னத்துக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்யுமாறு வாக்காளர்களை கேட்டுக்கொண்டபடி பிரச்சாரத்தைத் தொடர்ந்தார்.

தொடர்ந்து இரு முறை தேர்தலில் தோற்ற ரோஜா, இந்த முறை எப்படியும் வெற்றி பெற்றே தீருவது என்ற முனைப்போடு பிரச்சாரம் செய்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X