தெலுங்கு படத்தில் கிளாமர் ரோல்.. கணவரின் அந்த ரியாக்ஷன்.. இது என்ன நியாயம்.. லாஜிக் கேள்வி கேட்ட ரோஜா
சென்னை: நடிப்பிலிருந்து ஒதுங்கி அரசியலில் மட்டும் கவனத்தை செலுத்திவந்த ரோஜா இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். சமீபத்தில்தான் அவர் நடிப்பில் உருவான லெனின் பாண்டியன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. இதில் சிவாஜியின் பேரன் தர்ஷன் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்நிலையில் ரோஜா கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
ஆர்.கே.செல்வமணி இயக்கிய செம்பருத்தி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் ரோஜா. முதல் படமே மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அந்தப் படத்தில் அவரது நடிப்பையும், அழகையும் பார்த்த இயக்குநர்கள் அடுத்தடுத்து தங்களது படங்களில் புக் செய்தார்கள். அப்படி அவர் நடித்த சூரியன், உழைப்பாளி, வீரா,இந்து, அதிரடி படை என பல படங்கள் வரிசையாக ஹிட்டடித்தன. இதனால் இரண்டாவது படத்திலிருந்தே கோலிவுட்டில் பிஸியான ஆர்ட்டிஸ்ட்டாக மாறிவிட்டார் அவர்.
தெலுங்கிலும் ஹிட்தான்: தமிழில் எப்படி வரிசையாக ஹிட் படங்களில் நடித்து தனக்கென தனி மார்க்கெட்டை பிடித்தாரோ அதேபோல் தெலுங்கிலும் வாய்ப்புகள் குவிந்தன. இங்கு ரஜினி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களோடு நடித்தது மாதிரி அங்கும் டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து தனது கொடியை உயர பறக்க வைத்தார். எனவே தமிழ் போன்றே தெலுங்கிலும் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

செல்வமணியுடன் காதல்: இதற்கிடையே செம்பருத்தி படத்தில் நடித்தபோதே அதன் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை காதலித்தார் ரோஜா. இரண்டு பேரின் காதலுக்கும் வீட்டில் சம்மதம் கிடைத்ததை அடுத்து கடந்த 2002ஆம் ஆண்டு கோலாகலமாக அவர்களது திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு படிப்படியாக சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் ஒருகட்டத்தில் மொத்தமாக ஒதுங்கி அரசியலில் மட்டும் கவனம் செலுத்தினார். ஆந்திர மாநிலத்தின் அமைச்சராகவும் பதவி வகித்தார்.
இரண்டாவது இன்னிங்ஸ்: முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்திய அவர் தற்போது மீண்டும் நடிக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார். அதன்படி சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் ஹீரோவாக அறிமுகமாகும் லெனின் பாண்டியன் என்ற படத்தில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார். சமீபத்தில்தான் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ரோஜாவின் பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
ரோஜாவின் பேட்டி: சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு நடிகை தேவயானியுடன் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார் ரோஜா. அப்போது பேசிய அவர், "ஆர்.கே.செல்வமணி முதலில் என்னிடம் காதலை சொல்வதற்கு முன்பாகே என்னுடைய தந்தை, தாயிடம் ஓகே வாங்கிய பிறகுதான் என்னிடம் சொன்னார். அவரை எனக்கு முதல் படத்திலேயே பிடித்ததால் நானும் ஒத்துக்கொண்டேன். நான் ஷூட்டிங்கிற்கெல்லாம் செல்லும்போது அவர் என்னை பற்றி எனது பிள்ளைகளிடம் அப்படி இப்படி சொல்லாமல், 'உங்களுக்காகத்தான் அம்மா உழைக்கிறார்' என்று சொல்வார்.
செல்வமணியின் ரியாக்ஷன்: நாங்கள் காதலித்துக்கொண்டிருந்தபோது தெலுங்கு படத்தின் ப்ரிவ்யூ ஷோ எல்லாம் போடுவார்கள். நான் ஒருமுறை செல்வமணியை அழைத்து சென்றேன். ஒரு கிளாமர் பாடலில் என்னை பார்த்த பிறகு முகத்தை ஒருமாதிரி வைத்துக்கொண்டார். அதற்கு நானோ, 'உங்கள் படம் என்றால் அப்படி போஸ் கொடு. இந்த ட்ரெஸ் போடு' என சொல்கிறீர்கள். இப்போது மட்டும் ஏன் இப்படி முகத்தை வைத்துக்கொள்கிறீர்கள் என கேட்டேன். அதற்கு அவரோ, எனக்கு ஒரு மாதிரி இருக்கு. இனிமேல் என்னை அழைக்காதே என்று சொல்லிவிட்டார்ர். அன்றிலிருந்து அவர் ப்ரிவ்யூ ஷோ வருவதையே நிறுத்திவிட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











