அஜித்துக்கு பிடித்த 90ஸ் நடிகை யார் தெரியுமா?.. ரொம்ப பெரிய ரசிகராம்.. ரோஜா ஓபன் டாக்
சென்னை: அஜித்குமார் இப்போது கோலிவுட்டின் டாப் 4 நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். நடிப்பில் மட்டுமின்றி கார் ரேஸிலும் சக்கைப்போடு போடும் அவர் சமீபத்தில்கூட ஒரு ரேஸில் வெற்றியை பெற்றார். கரியரை பொறுத்தவரை அடுத்ததாக அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் மங்காத்தா 2விலும், சிவா இயக்கத்தில் ஒரு படத்திலும் அவர் நடிக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
சினிமாவில் எந்த பின்னணியும் இல்லாமல் வந்து பல தோல்விகள், போராட்டங்களை சந்தித்து இப்போது தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கியிருப்பவர் அஜித்குமார். கடந்த வருடத்தில் மட்டும் அவர் நடிப்பில் இரண்டு படங்கள் வந்தன. முதலில் வந்த விடாமுயற்சி ஏகேவையும், அவரது ரசிகர்களையும் கைவிட்டது. அடுத்ததாக வந்த குட் பேட் அக்லி; அஜித் ரசிகர்களுக்கு குட்டாகவும், மற்றவர்களுக்கு பேடாகவும், அக்லியாகவும் அமைந்தது ஒரு கெடுவாய்ப்பே. இருப்பினும் அந்தப் படம் வசூலில் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

அடுத்த படம்: ஆதிக் ரவிச்சந்திரனின் வேலை செய்யும் ஸ்டைல் பிடித்துவிட்டதால் தன்னுடைய குட் புக்கில் அவரை சேர்த்துவிட்டார் அஜித். அதன் காரணமாக மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். முதலில் இந்தப் படத்தை தயாரிப்பதற்கு ஆட்களே இல்லை என பேசப்பட்டது. அதனையடுத்து ஒரு நிறுவனம் தயாரிக்க முன் வந்திருப்பதாகவும்; அஜித்தும் அந்தப் படத்தில் இணை தயாரிப்பாளராக பணியாற்றவிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம் என்றும் தெரிகிறது.
கார் ரேஸில் அஜித்: இந்தப் படத்தை முடித்துவிட்டு வெங்கட் பிரபு, சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது ஒருபக்கம் இருக்க கார் ரேஸில் அவரது கவனம் முழுமையாக சென்றுவிட்டது. திரைத்துறைக்குள் அவர் வந்த போதே அவரது கவனம் ரேஸில் இருந்தது. அப்போது பல தோல்விகளையும், விபத்துகளையும் சந்தித்தார். இதனால் அவரது கரியரே ஆட்டம் கண்டது. எனவே சுதாரித்த அவர் கொஞ்ச் வருடங்களுக்கு ரேஸை ஒத்தி வைத்துவிட்டார். இப்போது முழு பலத்தோடு சர்க்யூட்டில் தனது டீமோடு சம்பவங்களை செய்துவருகிறார்.
ரோஜா பேட்டி: இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றிருக்கும் ரோஜா அதில் அஜித் பற்றிய நினைவுகளை பகிர்ந்துகொண்டார். அவர் பேசுகையில், "நானும் அஜித்தும் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்ற விக்ரமன் சார் படத்தில் நடித்தோம். அப்போது அவர் வளர்ந்துவரும் நடிகர். அவர் என்னுடைய மிகப்பெரிய ரசிகர். அந்தப் படம் மெகா ஹிட்டாகி 200 நாட்களுக்கு ஓடியது. அப்போது வாலி திரைப்படமும் ரிலீஸ் ஆகவில்லை. நான் அந்தப் படத்தில் கார்த்திக் சாருக்கு ஜோடி.
நாங்கள் மூன்று பேரும்: அஜித்தோ எனக்கு ஜோடி. எனவே நாங்கள் மூன்று பேரும் ஷூட்டிங் பிரேக்கில் ஒன்றாக அமர்ந்துகொண்டு பல விஷயங்களை பேசி சிரித்தோம். நன்றாக இருந்தது. அதேபோல் அவர் அப்போதே நன்றாக சமைப்பார். எனக்கு சிக்கன் என்றால் ரொம்ப பிடிக்கும். அவர் எனக்கு அதைத்தான் செய்துகொடுத்தார்" என்றார். ரோஜாவை பொறுத்தவரை கடந்த சில வருடங்களாக சினிமாவிலிருந்து ஒதுங்கியே இருந்தார். இப்போது லெனின் பாண்டியன் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications