»   »  வாம்மா ரோமா!

வாம்மா ரோமா!

Subscribe to Oneindia Tamil

ரோமா..

பெயருகேற்றார் போல படு மென்மை. அழகான இந்த பப்பாளி, காதலே என்காதலே படம் மூலம் ரசிகர்களின்இதயங்களை இதமாக வருடிக் கொடுத்துள்ளார்.

முதல் படத்தை வெற்றிகரமாக முடித்து விட்டு இப்போது நோட் புக் என்ற மலையாளப் படத்திற்காக ஆடிப்பாடிக் கொண்டுள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் ரோமாவைக் கண்டு மனம் லேசாகி கடலை போட ஆரம்பித்தோம்.

பெயரைப் பார்த்தால் ரோமான்னு இருக்கே, நீங்க வடக்கா என்று பிரிவினையாக பேச்சை ஆரம்பித்தோம்.ஆமா சார் (சாரா?) எங்க அப்பா, அம்மா வட இந்தியர்கள்தான். ஆனால் நான் பொறந்தது, வளர்ந்தது, படித்ததுஎல்லாம் திருச்சியில்தான். அப்புறம் சென்னைக்கு இடம் பெயர்ந்தோம் என்றார்.

உங்களை எங்கேயோ பார்த்திருக்கோமே என்று கேட்டால்,


நிச்சயம் பார்த்திருப்பீங்க.. எத்தனை டிவி விளம்பரங்கள்ல வந்திருக்கேன் தெரியுமா. சின்ன வயதிலேயே எனக்குடான்ஸ் நல்லா வரும். என் பொழுது போக்கே சினிமா பார்ப்பது தான். அதில நடிப்பவரக்ளைப் போல தனியாகநடித்தும் பார்ப்பேன்.

முதலில விளம்பரப் பட அழைப்பு வந்தது. அம்மாவிடம் கேட்டேன், சம்மதம் கொடுத்தார். இதனால் நடிக்கஆரம்பித்தேன். கிட்டத்தட்ட 100 விளம்பரப் படங்களில் நடித்து முடித்த நிலையில் அதைப் பார்த்து சினிமாவாய்ப்புகள் வந்தன.

ஆனால் நல்ல படங்களில் மட்டுமே நடிப்பது என்று இருந்தேன். அப்போதுதான், காதலே என் காதலே படவாய்ப்பு வந்தது. இந்தப் படம் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. கதை பிடித்ததால் நடிக்க சம்மதித்தேன். ரொம்பஅனுபவித்து நடித்தேன். அதற்கேற்ற பலன் இப்போது கிடைத்துள்ளது என்றார்.

அவரே தொடர்ந்து, எனது கேரக்டரில் என்னை விட எனது கண்கள்தான் அதிகம் நடிததிருக்கும் கவனித்தீர்களா?(இல்லையே,வேறு எங்கெயோவுல்ல பார்த்துண்டிருந்தோம்..) எனது கண்கள்தான் ரொம்ப பெரிய பிளஸ்பாயிண்ட் என்று கூறி கண்களால் உணர்ச்சிகளைக் கொட்டும் வகையில் நடிக்க சொன்னார் இயக்குனர் சேகர்.


சரி ரோமா, டக்குன்னு மலையாளத்துக்கு தாவிட்டீங்களே என்று பிரேக் போட்டோம்.

காதலே என் காதலே நடித்துக் கொண்டிருந்தபோதே இந்தப் பட வாய்ப்பு வந்துவிட்டது. சரி என்று ஒத்துக்கொண்டேன். இதவும் நல்ல படம்தான். கிளாமராக நடிக்க என்னால் முடியாது.

கதை பிடித்திருந்தால், இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட்டாக இருந்தாலும் மூணு ஹீரோயின் சப்ஜெக்ட்டாகஇருந்தாலும் கூட எனக்குக் கவலையில்லை. வெறுமனே உடலைக் காட்டி நடிப்பதில் எனக்கு உடன்பாடுகிடையாது என்றார் ரோமா.

ரோமாவின் அப்பா தங்க வியாபாரியாம் (நமீதா அப்பா துணி வியாபாரி) அம்மா இல்லத்தரசியாம். வீட்டுக்குஒரே பெண் ரோமா.

நடிப்போடு, அவ்வப்போது அப்பாவின் பிசினையும் கவனிததுக் கொள்கிறாராம்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil