ரஜினியுடன் ரொமான்ஸ் செய்தது ஈஸியாக இருந்தது: சோனாக்ஷி
மும்பை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ரொமான்ஸ் செய்தது எளிதாக இருந்தது என்று லிங்கா நாயகி சோனாக்ஷி சின்ஹா தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி நாயகிகளில் ஒருவரான சோனாக்ஷி சின்ஹா ரஜினிகாந்தின் லிங்கா படம் மூலம் கோலிவுட் வந்துள்ளார். முதல் தமிழ் படத்தில் தனது தந்தையின் நண்பரான ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார் சோனாக்ஷி.
படம் பற்றி சோனாக்ஷி சின்ஹா கூறுகையில்,

தமிழ்
எனக்கு அந்த கால தமிழுக்கும், தற்போதைய தமிழுக்கும் உள்ள வித்தியாசம் தெரியவில்லை.

கோலிவுட்
எனக்கு தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் பாலிவுட்டில் வரிசையாக படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதால் தமிழில் நடிக்க முடியவில்லை.

லிங்கா
லிங்கா படத்தில் நான் தான் நடிக்க வேண்டும் என தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் கேட்டுக் கொண்டதால் கதையை கேட்டேன். கதை பிடித்திருந்ததால் நடித்தேன்.

சூப்பர் ஸ்டார்
எத்தனை நாயகிகளுக்கு முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை பாக்கியமாக கருதுகிறேன்.

ரஜினி தான்
நானும் ரஜினி சாரும் கண்களால் காதல் செய்ய வேண்டும். அவருடன் ரொமான்ஸ் செய்வது எளிதாக இருந்தது.

முதல் ஆளாக
ரஜினி முதல் ஆளாக படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிட்டு கடைசி ஆளாக செல்வார் என்றார் சோனாக்ஷி


Click it and Unblock the Notifications











