Don't Miss!
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ண கோரிய வழக்கு.. நாளை வரும் இடைக்கால உத்தரவு! இது ஏன் முக்கியம்?
- Automobiles உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
என் முதல் பட ஹீரோவை காதலிக்கிறேனா?: ப்ரியா வாரியர்
Recommended Video
திருவனந்தபுரம்: ப்ரியா பிரகாஷ் வாரியர் ஒரு அடார் படத்தில் தன்னுடன் நடித்த ரோஷன் அப்துல் ரவூஃபை காதலிப்பதாக வெளியான தகவல் குறித்து உண்மை தெரிய வந்துள்ளது.
ஒரு அடார் லவ் படத்தில் ரோஷன் அப்துல் ரவூஃபை பார்த்து கண்ணடித்து ஒரே நாளில் இந்தியா முழுவதும் பிரபலமானவர் ப்ரியா பிரகாஷ் வாரியர். அந்த காட்சி பிரபலமானதே தவிர படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. ப்ரியாவின் நடிப்பு அந்த படத்தின் இயக்குநருக்கே பிடிக்கவில்லை.
எந்த நெட்டிசன்கள் ப்ரியாவை கொண்டாடினார்களோ அவர்களே படத்தை பார்த்த பிறகு அவரை கண்டமேனிக்கு கலாய்த்தனர். இந்நிலையில் ப்ரியா வாரியர் ரோஷனை காதலிப்பதாக செய்திகள் வெளியாகின.
இவ்வளவு சீக்கிரத்தில் நிறைவேறிய கனவு: விக்னேஷ் சிவன் ஹேப்பி அண்ணாச்சி
இது குறித்து ப்ரியா பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,
வதந்திகள் பற்றி நான் என்ன சொல்வது. அது குறித்து சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ரோஷன் என் நல்ல நண்பர். எங்களுக்கு இடையே நல்ல புரிதல் உள்ளது. அவ்வளவு தான்.
அவருடன் மீண்டும் சேர்ந்து நடிக்க ஆவலாக உள்ளேன். அவர் சிறந்த நடிகர், நல்ல டான்ஸர். எங்களுக்கு இடையேயான நட்பால் சிறப்பாக நடிக்க முடியும். இந்த கூட்டணி விரைவில் மீண்டும் சேர்ந்து நடிக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.