ஹன்சிகா மோத்வானியின் ‘‘ரவுடி பேபி“… க்ளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்த வைரமுத்து !

சென்னை : தனுஷ் , சாய்பல்லவி நடித்த மாரி 2 திரைப்படத்திற்கு பிறகு மிகவும் பிரபலமான வார்த்தையானது ரவுடி பேபி. அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற, ரவுடி பேபி பாடல் இன்று வரை அனைவரையும் ஆட்டம் போட வைத்துள்ளது.

ஹன்சிகா மோத்வானி நடிக்கும் புதிய படத்திற்கு ரவுடி பேபி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்திற்கு பூஜை போடப்பட்டு , படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியது.

பல மொழிகளில்

பல மொழிகளில்

ஹன்சிகா தெலுங்கு, மராத்தி, பெங்காலி, ஆங்கிலம், இந்தி துளு, தமிழ் ஆகிய மொழிகளை இவர் சரளமாகக் பேசக்கூடியவர். இவர் கடைசியாக அதர்வாவுடன் 100 படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

மஹா

மஹா

அந்த திரைப்படத்தை அடுத்து மஹா படத்தில் நடித்தார். இப்படம் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட திரைப்படமாகும். இதில் கௌரவ தோற்றத்தில் நடிக்க சிம்புவிடம் கேட்டபோது, ஹன்சிகாவின் பழைய கருத்து வேறுபாடுகளை மறந்து நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்தார். சிம்பு படத்திற்குள் நுழைந்ததும் அவரின் கதாபாத்திரம் அதிகம் வரும் படி கதை நீட்டிக்கப்பட்டது. இப்படத்தில் சிம்பு ஒரு பாடலிலும் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது.

105 மினிட்ஸ்

105 மினிட்ஸ்

105 மினிட்ஸ் திரைப்படத்தில் ஹான்சிகாவைத் தவிர வேறுயாரும் இல்லை. சமீபத்தில் பார்த்திபன் ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்தில் அவர் மட்டுமே நடித்திருந்தார். ஆனால் அந்த திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் அல்ல. 105 மினிஸ்ட் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ராஜு டுஸ்ஸா எழுதி இயக்கிறார். பொம்மக் சிவா தனது ருத்ரன்ஷ் செலுலாய்ட் சார்பில் தயாரித்துள்ளார். இப்படமும் ரிலீசுக்குதயாரா உள்ளது.

ரவுடி பேபி

ரவுடி பேபி

இந்நிலையில் ஹன்சிகா மோத்வானி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. ரவுடி பேபி எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் ராஜ சரவணன் இயக்குகிறார். ரமேஷ் பிள்ளை தயாரிக்க, பி.செல்லத்துரை ஒளிப்பதிவு செய்கிறார். சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். இப்படத்திற்கான பாடல்களை எழுதும் கவிஞர் வைரமுத்து, க்ளாப் அடித்து இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கிவைத்தார். இப்படத்தில் சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X