பரு நாயகி.. செவப்பழகி.. ரௌடி பேபி சாய்பல்லவிக்கு 28 வயசு.. ரசிகர்கள்.. பிரபலங்கள் வாழ்த்து !

சென்னை : சாய்பல்லவி இன்று தனது 28வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

ஏ ரௌடி பேபி என்ற பாடல் மூலம் பிரபலமானவர் தான் சாய் பல்லவி. மாரி 2 படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் உலகெங்கும் வைரலானது அதற்கு முக்கிய காரணம் அந்த பாடலின் கொரியோகிராப்பி, தனுஷின் டான்ஸ் போன்றவை பக்காவாக இருந்ததுதான்.

அதையும் தாண்டி ஒரு அழகான நடன புயல் முக்கிய காரணமாக இருந்தது. ஆம்! அது தான் நம் சாய்பல்லவி. இன்று அவரின் 28வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

சாய்பல்லவியின் பிறந்தநாளான இன்று அவரின் திரைத்துறை பயணத்தை சற்று திரும்பி பார்ப்போம்.

 கோத்தகிரியில் பிறந்தார்

கோத்தகிரியில் பிறந்தார்

நம் ரவுடி பேபி கோத்தகிரியில் பிறந்து கோயம்பத்தூரில் படித்து எம்.பி.பி.எஸ் படிப்பை வெளிநாட்டில் படித்தார் என்றால் யாரும் நம்பமாட்டார்கள் ஆனால் உண்மையில் அவர் டாக்டராக பணிபுரிந்தார்.பின் சினிமா மீது கொண்ட மோகத்தால் தன் மருத்துவ பணியை விட்டு சினிமாவில் கால் வைத்தார். ஆரம்ப காலங்களில் ஜெயம் ரவியின் தாம் தூம் படத்தில் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 நடனத்தின் மீது ஆசை

நடனத்தின் மீது ஆசை

சிறு வயது முதலே நடனத்தின் மீது அதிக ஆர்வம் கொண்ட சாய் பல்லவி. நடனத்தின் மீது கொண்ட காதலால் 2008ல் ஸ்டார் விஜயின் தொலைக்காட்சியில் உங்களில் யார் அடுத்த பிரபு தேவா என்ற நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதைடுத்து, ஈடிவியிலும் ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன் டான்ஸ் ஆசையை ஓரளவு பூர்த்தி செய்துக் கொண்டார்.

 மலர் டீச்சர்

மலர் டீச்சர்

இதையடுத்து, இவருக்கு பட வாய்ப்ப்புகள் வந்தன இருந்தாலும் படிப்பு பாதிக்காத வகையில் விடுமுறை நாட்களில் பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். படம் முடிந்ததும் மீண்டும் தன் படிப்பை தொடங்கினார் சாய் பல்லவி. பிரேமம் படம் இளைஞர்கள் மனதில் சாய்பல்லவி எனும் அழகை பதிய வைக்க போகிறது என்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். அந்த அளவிற்கு மலையாள சினிமாவையும் தாண்டி பல மொழிகளில் சாய் பல்லவி மிக பிரபலமானவராக மாறிவிட்டார்.

 ரசிகர்கள் மறக்கவில்லை

ரசிகர்கள் மறக்கவில்லை

இதையடுத்து, தெலுங்கில் இவர் நடித்த ஃபிடா என்ற திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதையடுத்து, தமிழில் முதன்முறையாக இயக்குனர் விஜய் அவர்களின் தியா என்ற படத்தில் அறிமுகமானார். பின் தமிழில் மாரி2, என்.ஜி.கே போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழிலும் பிரபலமானார். தமிழில் சில படங்களே நடித்தாலும் இந்த ரவுடி பேபியை தமிழ் ரசிகர்கள் மறக்கவில்லை.

 சிவந்த கன்னம்

சிவந்த கன்னம்

இவர் கன்னத்தில் இருக்கும் பரு, எப்போதும் சிவந்திருக்கும் கன்னமே இவரது பிளஸ்ஸாக மாறிவிட்டது. சினிமாவில் மிகப் பெரிய அளவில் பிரபலமாக பல படங்கள் நடிக்க வேண்டும் என்பது அவசியமில்லை எப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறோம் என்பது தான் முக்கியம் அதற்கு உதாரணம் நம் சாய்பல்லவி.

 இன்றுடன் 28 வயசு

இன்றுடன் 28 வயசு

சாய் பல்லவி இன்று தனது 28வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு ரசிகர்கள் பலரும் திரை நட்சத்திரங்களும் பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.மலர் டீச்சருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று பல ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். சாய் பல்லவி என்ற பெயரை தாண்டி இன்றும் பலரின் மனதில் மலர் டீச்சராகவே ரசிகர்கள் மனதில் உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X