நயன்தாரா பிறந்தநாள் ஸ்பெஷல்... புதிய பட அறிவிப்பை வெளியிட்ட ரவுடி பிக்சர்ஸ்
சென்னை : நடிகை நயன்தாரா தன்னுடைய 37வது பிறந்தநாளை இன்றைய தினம் கொண்டாடி வருகிறார்.
Recommended Video
இதையொட்டி அவருக்கு சமூவலைதளத்தில் வாழ்த்துமழை பொழிந்து வருகிறது.
இந்நிலையில் நேற்றைய தினம் அறிவித்தபடி, ரவுடி பிக்சர்சின் புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாரா
தென்னிந்திய மொழி படங்களில் சிறப்பான அங்கமாக தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளங்கி வருகிறார் நடிகை நயன்தாரா. டூயட் பாடுவதாகட்டும், சிறப்பான கேரக்டர் ரோலாக இருக்கட்டும் நயன்தாரா தான் டைரக்டர்களின் முதல் சாய்சாக உள்ளார்.

அண்ணாத்த படம்
சமீபத்தில் சூப்பர்ஸ்டாருடன் ஜோடி போட்டு இவரது நடித்துள்ள அண்ணாத்த படம் ரிலீசாகி பட்டையை கிளப்பி வருகிறது. படத்தில் இவரது கேரக்டர் சிறப்பான கவனம் பெற்றுள்ளது. சாரக் காற்றே பாடலில் கவிதையை தோன்றி ரசிகர்களை கவர்ந்தார் நயன்தாரா.

37வது பிறந்தநாள்
இந்நிலையில் தன்னுடைய 37வது பிறந்தநாளை இன்றைய தினம் கொண்டாடி வருகிறார் நயன்தாரா. இதையொட்டி கேக் மழையில் இவரை நனைய விட்டார் இயக்குநர் விக்னேஷ் சிவன். மேலும் தனக்கு எல்லாமுமாக உள்ள நயன்தாரா இதேபோன்ற தனித்துவத்துடன் எப்போதும் இருக்க வேண்டும் என்றும் வாழ்த்தியுள்ளார்.

புதிய பட அறிவிப்பு
மேலும் இன்றைய தினம் நயன்தாரா பிறந்தநாளையொட்டி ரவுடி பிக்சர்சின் புதிய பட அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மாயா உள்ளிட்ட படங்களை தொடர்ந்து பேய் படமாக இந்தப்படம் உருவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கனெக்ட் படம் அறிவிப்பு
இந்நிலையில் இன்றைய தினம் நயன்தாரா தனது ரவுடி பிக்சர்சில் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. படத்திற்கு கனெக்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் ரவுடி பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

அஸ்வின் சரவணன் இயக்கம்
அஸ்வின் சரவணன் இந்தப் படத்தை இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நயன்தாரா சுவற்றில் மும்முரமாக எதையோ செய்துக் கொண்டிருக்கிறார். இதனிடையே படத்தின் இரண்டாவது போஸ்டரும் தற்போது வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











