அனுஷ்கா 33... பிறந்தநாள் பரிசு கொடுத்த ருத்ரம்மா தேவி இயக்குநர்

By Mayura Akilan

ஹைதராபாத்: நடிகை அனுஷ்காக தனது 33வது பிறந்தநாளை நேற்று கொண்டாடியுள்ளார். இந்த ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் ருத்ரம்மாதேவி படத்தின் இயக்குனர் குணசேகர் ஒரு வித்யாசமான பரிசளித்திருக்கிறார்.

கோலிவுட்,டோலிவுட்டில் மூத்த ஹீரோயின் அனுஷ்கா. தற்போது 32-வயதை எட்டியுள்ள அனுஷ்கா தற்போது தமிழ், தெலுங்கு என 4 மெகா பட்ஜெட் படங்களில் இரவுபகலாக படு-பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

3டி யில் பிரமாண்டமாக தயாராகி வரும் சரித்திரப் படம் ருத்ரம்மாதேவி. இதில் ராணி ருத்ரம்மாதேவியாக அனுஷ்கா நடித்துள்ளார். அவர்தான் படத்தின் மையக்கதாபாத்திரம்.

நேற்று நவம்பர்-7 தேதி தனது 33 பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார். அனுஷ்காவின் பிறந்தநாள் பரிசாக ருத்ரம்மா ‘தேவி' இயக்குனர் குணசேகரன் மேக்கிங் வீடியோவை பரிசளித்துள்ளார்.

யு டியூப்பில் வெளியான சில நிமிடங்களிலேயே இந்த வீடியோ இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் பார்த்துள்ளனர்.

வாள் சண்டை

வாள் சண்டை

ருத்ரம்மா தேவி படத்தில் அனுஷ்கா பல சண்டைக்காட்சிகளில் மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார்.

எலும்பு முறிவோடு...

எலும்பு முறிவோடு...

சமீபத்தில் கூட அனுஷ்காவின் வலது கை மணிக்கட்டில் ஏர் கிராக் எனப்படும் சிறிய அளவிலான எலும்பு முறிவு ஏற்பட்டது.

இருப்பினும் மணிக்கட்டில் 5ரோல் ஸ்கின் நிற பேண்டேஜை சுற்றிக்கொண்டு, வலி நிவாரண ஊசி போட்டுக்கொண்டு வாள் சண்டை காட்சிகளை குறித்த நேரத்தில் முடித்துக் கொடுத்திருக்கிறார்.

பிறந்தநாள் பரிசு

பிறந்தநாள் பரிசு

எனவேதான் அனுஷ்காவின் பிறந்த நாளை முன்னிட்டு ருத்ரம்மா தேவி படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளார் இயக்குனர் குணசேகரன்.

பாகுபலி

பாகுபலி

கடந்த ஆண்டு பிறந்தநாள் பரிசாக, பாகுபலி படத்தின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி மேக்கிங் வீடியோவை வெளியிட்டார். அதேபோல இந்த ஆண்டு ருத்ரம்மா தேவி மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

2015 ரிலீஸ்

2015 ரிலீஸ்

அனுஷ்காவின் இரண்டு படங்களுமே 2015ஆம் ஆண்டு ரிலீஸ் ஆக உள்ளது. எனவே அடுத்த ஆண்டு அனுஷ்கா ஆண்டுதான் என்கின்றனர் அவரது ரசிகர்கள்.

சூப்பர் ஸ்டாருடன்

சூப்பர் ஸ்டாருடன்

அதோடு சூப்பர் ஸ்டாரின் லிங்கா, அஜீத் உடன் என்னை அறிந்தால் படங்களில் நடித்து வருகிறார். இரண்டு படங்களும் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளதால் கூடுதல் மகிழ்ச்சியில் இருக்கிறார் அனுஷ்கா.

More from Filmibeat

Read more about: anushka அனுஷ்கா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X