அனுஷ்காவுக்கு 32வது பர்த்டே: பரிசாக வெளியான ருத்ரமா தேவி ஃபர்ஸ்ட் லுக்
ஹைதராபாத்: நடிகை அனுஷ்கா தனது 32வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாள் பரிசாக தெலுங்கு படமான ருத்ரமா தேவியின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
அனுஷ்கா, ஆர்யா நடித்துள்ள இரண்டாம் உலகம் படம் வரும் 22ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் அனுஷ்காவின் நடிப்பு மிரள வைக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர் தெலுங்கில் 2 சரித்திர படங்களில் நடிக்கிறார்.

ருத்ரமா தேவி
பல கோடி செலவில் எடுக்கப்பட்டு வரும் ருத்ரமா தேவி படத்தில் அனுஷ்கா நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் ரூ. 5 கோடி மதிப்புள்ள நகைகளை அணிந்து நடித்து வருகிறார்.

வெட்கம்
இந்த படத்தில் அனுஷ்கா கவர்ச்சியாக உடை அணிந்து ஆடும் பாடல் காட்சியை படமாக்கியுள்ளனர். அந்த காட்சியில் ஆடையை குறைத்து நகைகளால் அனுஷ்காவை அலங்கரித்துள்ளனர். இதனால் அவர் வெட்கி நெளிய இயக்குனர் குணசேகர் யூனிட் ஆட்களை வெளியே அனுப்பிவிட்டு குறிப்பிட்ட சிலரை மட்டும் வைத்து பாடலை படமாக்கினாராம்.

32வது பிறந்தநாள்
அனுஷ்கா தனது 32வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். ருத்ரமா தேவி படத்திற்காக அனுஷ்கா 15 கிலோ வரை எடை குறைத்துள்ளாராம்.

ஃபர்ஸ்ட் லுக்
அனுஷ்காவின் பிறந்தநாளையொட்டி ருத்ரமா தேவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











