போட்டோக்களால் நிரம்பும் இன்ஸ்டா..கன்னாபின்னா லுக்கில் பிரபல நடிகை..கண்டபடி வர்ணிக்கும் ரசிகர்கள்!

By

சென்னை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வேகமாக பரவி வருகின்றன.

நட்டி என்ற நட்ராஜ் சுப்பரமணியம், மனீஷாஶ்ரீ, அதுல் குல்கரி, மயில்சாமி உட்பட பலர் நடித்த படம், 'போங்கு'.

தேஜ் இயக்கி இருந்த இந்தப் படத்துக்கு ஶ்ரீகாந்த் தேவா இசை அமைத்திருந்தார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்திருந்தார்.

காலண்டர் கேர்ள்ஸ்

காலண்டர் கேர்ள்ஸ்

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ருஹி சிங். இந்தப் படத்துக்குப் பிறகு தமிழில் வாய்ப்புக் கிடைக்கவில்லை. நிசா பஹுஜா இயக்கிய, த வேர்ல்ட் பிஃபோர் ஹர் என்ற ஆங்கில ஆவணப் படம் மூலம் நடிகையான இவர், இந்தியில் மதுர் பண்டார்கர் இயக்கிய காலண்டர் கேர்ள்ஸ் படத்தில், ஹீரோயினாக அறிமுகமானார்.

லாக்டவுன்

லாக்டவுன்

அடுத்து, சமீர் சிப்பி இயக்கிய இஷ்க் பார் எவர் படத்தில் ஹீரோயினாக நடித்தார்.
பின்னர் ஸ்பாட்லைட் 2 வெப் சிரீஸில் நடித்த இவர், தெலுங்கில் மசகல்லு என்ற படத்தில் நடித்து வருகிறார். விஷ்ணு மஞ்சு, காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி, நவ்தீப் உட்பட பலர் நடிக்கும் இந்தப் படத்தை ஜெஃப்ரி ஜீ ஜின் இயக்குகிறார். லாக்டவுன் காரணமாக இதன் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது.

அழகி போட்டி

அழகி போட்டி

பாடகியாக வேண்டும் என்ற கனவில் இருந்த ருஹி சிங் நடிகையானது, நடிகைகள் வழக்கமாக சொல்வதைப் போல, விபத்துதான். 2011 ஆம் ஆண்டில் மாடலிங் உலகுக்கு சென்ற அவர், மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்க, ரன்னர் அப் கிடைத்தது. பிறகு சீனா மற்றும் மியாமியில் நடந்த அழகி போட்டிகளுக்கு இந்தியா சார்பில் அனுப்பப்பட்டார்.

சினிமா வாய்ப்பு

சினிமா வாய்ப்பு

2014 ஆம் ஆண்டு, பெமினா மிஸ் இந்தியா பட்டம் பெற்றதும் சினிமா வாய்ப்புகள் வந்தன. கடந்த 2014 ஆம் ஆண்டு நாளிதழ் ஒன்று நடத்திய மிகவும் விரும்பத்தக்க 25 பெண்கள் பட்டியலில் ஒருவராக இடம் பெற்றிருந்தவர் ருஹி சிங். இந்தி மற்றும் தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறப்பார் என்று கணித்தார்கள் இவரை. இன்னும் காலம் இருக்கிறதே.

கிளாமர் புகைப்படங்கள்

கிளாமர் புகைப்படங்கள்

இதற்கிடையே, லாக்டவுன் காரணமாக, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். அடிக்கடி தனது கிளாமர் புகைப்படங்கள், மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிக்கும் ருஹியின் இன்ஸ்டா அவரது புகைப்படங்களாலும் வீடியோக்களாலும் நிரம்பி இருக்கிறது. இதற்கு ரசிகர்கள் தங்கள் இஷ்டம்போல வர்ணித்து வருகின்றனர். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X