»   »  போதுமா ருக்மணி!

போதுமா ருக்மணி!

Subscribe to Oneindia Tamil

மீண்டும் வருகிறார் பிரதாப் போத்தன்.

தமிழ் சினிமாவின் மறக்க முடியாத சில புள்ளிகளில் பிரதாப்புக்கும் ஒரு இடம் உண்டு. அவரது நடிப்பு என்னவகையானது என்பதை இன்று வரை யாராலும் உறுதியாக அறுதியிட்டுக் கூற முடியாது. அப்படி ஒரு நடிப்புநம்ம பிரதாப்புடையது.

அந்தக் கால படங்களில் பிரதாப்புக்காகவே ஒரு அட்டு அசடு கேரக்டரை வைத்திருப்பார்கள். அவரும்கலக்கலாக நடிப்பார். பெரிய சைஸ் கண்ணாடி, தொள தொள பேண்ட்ஸ், ஃபுல் ஹேண்ட் சட்டை, கையில்சிகரெட், வாய் வரை வந்து மூடும் தலைமுடி என டிப்பிக்கல் தோற்றத்தில் நடிப்பார் பிரதாப்.

அசட்டுத்தனமான தோற்றம் இயற்கையாகவே அவருக்கு இருப்பதால் அவர் நடிப்பது போலவே தோன்றாது,நிஜமாகவே இவர் இப்படித்தான் போலும் என எண்ணத் தோன்றும். ஆனாலும் மனிதர் மண்டைக்காரர். சிலபடங்களையும் இயக்கியுள்ளார்.

அவரும் முன்னாள் மனைவி ராதிகாவும் இணைந்து தயாரித்து இயக்கிய மீண்டும் ஒரு காதல் கதை தேசியவிருதை வென்ற படம். அதேபோல வெற்றி விழா, சீவலப்பேரி பாண்டி, ஜீவா, மைடியர் மார்த்தாண்டன் ஆகியசூப்பர் ஹிட் படங்களையும் இயக்கியுள்ளார் பிரதாப்.

இப்போது பெரிய இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இயக்க வருகிறார் பிரதாப் போத்தன். நீ இன்றி என தனதுபடத்திற்கு முதலில் பெயர் வைத்திருந்தார் பிரதாப். பின்னர் அதை பொம்பலாட்டம் என மாற்றினார். இப்போது அதை ஒருநாள் போதுமா என்று மாற்றி விட்டார்.

முதலில் திரிஷா நடிப்பதாக இருந்தது. இப்போது அவரும் கிடையாது. லண்டனைச் சேர்ந்த ருக்மணி என்றபெண்ணை நடிக்க வைக்கிறார். மாதவன்தான் ஹீரோ.

ருக்மணி அமெரிக்காவில் படிப்பை முடித்துள்ளவர். அங்கேதான் வாசமம் கூட. பக்கா தமிழ்ப் பொண்ணாம்(ஆனால் பிரதாப்புக்கு மதர் மொழி மலையாளம்!). ஆனால், பார்க்க இங்கிலீஷ் பெண் மாதிரி இருக்கிறார் ருக்கு.

ருக்மணி என்ற பெயரே அழகாக இருப்பதால் மாற்ற விருப்பமில்லையாம் பிரதாப்புக்கு.

ஆனால் மார்க்கெட் ரேஞ்சுக்கு இது சரிப்பட்டு வராது என்பதால் பெயரை மாற்றும் வாய்ப்பு இருக்கிறதாம்(கிக்குமணி நல்லா இருக்கா சேட்டா?)

முதலில் நடிப்பதாக இருந்த திரிஷா, விஷாலுடன் நடிக்க வந்த வாய்ப்பால் பிரதாப்புக்கு ஸாரி, பூரி, அப்பளம்,வடை சொல்லி விட்டுப் போய் விட்டார்.

ஏப்ரல் 14ம் தேதி, தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று ஏவி.எம்மில் சிம்பிளாக பூஜை போட்டு படத்தை ஆரம்பிக்கதிட்டமிட்டுள்ளாராம் பிரதாப்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil